"அன்புள்ள நண்பரே!" - அமெரிக்க அதிபராக பதவியேற்ற டிரம்புக்கு பிரதமர் மோடி - அழையா வரந்தாளி அனாலும் வாழ்த்துக்கள்!
,

அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்புக்கு பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
அமெரிக்காவின் 47-ஆவது அதிபராக பதவியேற்ற டொனால்டு டிரம்புக்கு (Donald Trump) இந்திய பிரதமர் நரேந்திர மோடி வாழ்த்து தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து பிரதமர் தனது எக்ஸ் தளத்தில் வெளியிட்ட வாழ்த்துப் பதிவில், "வரலாற்று சிறப்புமிக்க இந்த பதவியேற்பு நிகழ்வில், அமெரிக்காவின் 47-ஆவது அதிபராகும் அன்பு நண்பர் டொனால்டு டிரம்புக்கு என் வாழ்த்துகள். இன்னொரு முறை நாம் இணைந்து இரு நாடுகளை வளர்ச்சி பாதைக்குக் கொண்டு செல்வோம். இந்த பதவிக்காலம் சிறப்பானதாக அமையட்டும்" என்று குறிப்பிட்டுள்ளார்.
அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சி சார்பில் போட்டியிட்ட டொனால்டு டிரம்ப், அதிக வாக்குகளைப் பெற்று வெற்றி பெற்றார். இதன் வாயிலாக அவர் அமெரிக்காவின் 47-ஆவது ஜனாதிபதியாக தேர்வானார். அவரை எதிர்த்து போட்டியிட்ட ஜனநாயகக் கட்சியின் அப்போதைய துணை ஜனாதிபதி கமலாஹாரிஸ் படுதோல்வி அடைந்தார்.
பதவியேற்பு விழா ஏற்பாடுகள்:
இதனையடுத்து அதிகார மாற்றத்திற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டு, அந்நாட்டின் அரசியல் அமைப்பின்படி ஜனவரி 20-ஆம் தேதி அதிபர் பதவி ஏற்பார் என்று அறிவிக்கப்பட்டது. வாஷிங்டன் டிசி-யில் உள்ள கேப்பிட்டல் எனப்படும் நாடாளுமன்ற கட்டட வளாகத்தில் தான் பதவியேற்பு விழா நடைபெறும். ஆனால், இம்முறை அதிக குளிர் காரணமாக ஏற்பாடுகள் அனைத்தும் நாடாளுமன்ற கட்டடத்திற்குள் செய்யப்பட்டது.
அதிகாரப் பகிர்வுக்கு முன் டெனால்டு டிரம்ப் மற்றும் அவருடைய மனைவி மெலனியாவையும் நிர்வாக மாளிகைக்கு அழைத்து, முன்னாள் அதிபர் ஜோ பைடன் மற்றும் அவருடைய மனைவி ஜில் பைடன் ஆகியோர் வரவேற்று விருந்தளித்தனர். பின்னர், நாடாளுமன்ற கட்டடத்திற்குள் டிரம்ப் அழைத்து செல்லப்பட்டார்.
பதவியேற்ற பின் சூளுரை:
அங்கு குழுமி இருந்த ஜோ பைடன் உள்பட முன்னாள் அதிபர்களுடன் டிரம்ப் கைகுலுக்கி நட்பு பாராட்டினார். இந்திய நேரப்படி நேற்றிரவு (ஜனவரி 20) 10:15-க்கு தொடங்கிய பதவியேற்பு விழாவில், அமெரிக்க அரசியல் சாசன விதிப்படி, முதலில் துணை அதிபராக ஜே.டி. வான்ஸ் பதவியேற்றார். இவருக்கான பதவி பிரமாணத்தை அந்நாட்டின் தலைமை நீதிமன்ற நீதிபதி ஜான் ராபர்ட்ஸ் செய்து வைத்தார்.