பலதும் பத்தும் :- 14,03,2025 -அமெரிக்காவை மிஞ்சும் ஆயுதக் கலாச்சாரம், விதத்தவை விளைஞ்சு நிக்குது.
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு ; நடவடிக்கை எடுக்காத பொலிஸார்.

மூதூரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை.
மூதூர் - தஹாநகரில் இரண்டு சகோதரிகள் வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர். 68 மற்றும் 74 வயதுடைய இருவரே இவ்வாறு கொலை செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் மேலும் தெரிவித்தனர். சம்பவம் தொடர்பில் மூதூர் பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அனுராதபுரம் வைத்தியர் விவகாரம் - கைதானநபரின் வீட்டில் கைக்குண்டு.
அனுராதபுரம் வைத்தியசாலையின் பெண் வைத்தியரை பாலியல் பலாத்காரம் செய்த குற்றச்சாட்டில் கைதுசெய்யப்பட்ட சந்தேக நபரின் வீட்டிலிருந்து கைக்குண்டு ஒன்றை பொலிஸார் கண்டுபிடித்துள்ளனர்.
சந்தேக நபர் வசித்த கல்னேவ வீட்டில் இன்று (14) காலை கல்னேவ பொலிஸாரும் பொலிஸ் விசேட அதிரடிப்படையினரும் இணைந்து நடத்திய தேடுதல் நடவடிக்கையின் போதே குறித்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
வைத்தியரின் தொலைந்து போன கையடக்க தொலைபேசியை கண்டறியும் நோக்கில் நடத்தப்பட்ட சோதனையின்போது இந்த கைக்குண்டு கண்டுபிடிக்கப்பட்டது.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (13) அனுராதபுரம் பிரதான நீதவான் நீதிமன்றத்தில்ஆஜர்படுத்தப்பட்டபோதுஇ அவரை 48 மணி நேரம் தடுத்து வைத்து விசாரணை செய்ய பொலிஸாருக்கு அனுமதிவழங்கப்பட்டமை குறிப்பிடத்தக்கது.
வெலிவேரிய துப்பாக்கிச் சூடு - வௌியான புதியதகவல்.
அமெரிக்காவை மிஞ்சும் ஆயுதக் கலாச்சாரம்விதத்தவை விளைஞ்சு நிக்குது.
வெலிவேரிய அரலியகஸ்தெக சந்திப் பகுதியில் நேற்று (13) இரவு நடந்த துப்பாக்கிச் சூட்டில் ஒருவர்காயமடைந்திருந்தார்.
காயமடைந்த நபர் சிகிச்சைக்காக கம்பஹா மாவட்ட பொது வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.
மோட்டார் வாகனத்தில் பயணித்த ஒருவரை இலக்கு வைத்து இந்த துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டுள்ளதாகபொலிஸார் தெரிவித்தனர்.
துப்பாக்கிச் சூட்டில் அந்த நபரின் இடது கை காயமடைந்துள்ள நிலையில்இ துப்பாக்கிச் சூடு நடந்த பின்னர்இ அவர்வாகனத்தை நிறுத்தாமல் வைத்தியசாலை நோக்கி சென்றதாக தெரிவிக்கப்படுகிறது.
மோட்டார் சைக்கிளில் வந்த அடையாளம் தெரியாத இருவரால் பிஸ்டல் வகை துப்பாக்கியைப் பயன்படுத்தி இந்ததுப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டிருக்கலாம் என பொலிஸார் சந்தேகிக்கின்றனர்.
இந்த சம்பவம் தொடர்பாக மூன்று பொலிஸ் குழுக்கள் விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றன.
சிறைச்சாலை உதவி அத்தியட்சகரை இலக்கு வைத்துதுப்பாக்கிச்சூடு.
அக்மீமனஇ தலகஹ பகுதியில் நடத்தப்பட்ட துப்பாக்கிச்சூட்டில் காலி பூஸ்ஸ அதிஉயர் பாதுகாப்புசிறைச்சாலையின் முன்னாள் உதவி அத்தியட்சகர் ஒருவர் உயிரிழந்தார்.
இன்று பிற்பகல் அவர் தமது வீட்டு முற்றத்தில் இருந்தபோது மோட்டார் சைக்கிளில் வந்த இருவர்துப்பாக்கிச்சூட்டை நடத்திவிட்டு தப்பிச் சென்றுள்ளனர்.
09 மில்லிமீற்றர் ரக கைத்துப்பாக்கியில் இந்த துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
சந்தேகநபர்களை கைது செய்வதற்கான விசாரணைகளை பொலிஸார் முன்னெடுத்துள்ளனர்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக தமிழ் மொழியில் ரூபாய்சின்னம்.
ஹிந்தி மொழியில் அமைந்த ரூபாய் சின்னத்தை தமிழ் மொழிக்கு மாற்றி அமைக்க தமிழக முதல்வர்மு.க.ஸ்டாலினினால் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
ரூபாய் என்பதில் 'ரூ' எழுத்தை மாத்திரம் நாணயப் பெறுமதியை குறிக்க பயன்படுத்தும் வகையில் புதியஅறிவிப்பு வௌியிடப்பட்டது.
தமிழக சட்டமன்றத்தில் நாளை சமர்ப்பிக்கப்படவுள்ள 2025ஃ26 நிதியாண்டுக்கான வரவு செலவுத்திட்டஅறிக்கையில் இந்த மாற்றம் கொண்டுவரப்பட்டுள்ளது.
இந்திய மத்திய அரசின் மும்மொழிக் கொள்கை கல்வித் திட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில்தமிழக மாநில அரசினால் இந்த புதிய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
மாநிலமொன்றில் இத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுவது இந்திய வறலாற்றில் இதுவேமுதல்முறையென இந்திய ஊடகங்கள் செய்தி வௌியிட்டுள்ளன.
சிங்களப் பாடசாலையில் தமிழ் மாணவன் தீ வைத்து எரிப்பு ; நடவடிக்கை எடுக்காத பொலிஸார்.
நுவரெலியா நாவலப்பிட்டி தொகுதியில் உள்ள சிங்களப் பாடசாலை ஒன்றில் கல்விகற்கச் சென்ற தமிழ் மாணவனைஇ அந்தப் பாடசாலையில் கல்வி கற்கும் சக மாணவர்கள் தீ வைத்து எரித்துள்ளதாக செய்திகள் வெளியாகியுள்ளன.
குறித்த சிறுவனின் கால்களை ரினர் ஊற்றி சக மாணவர்கள் எரித்துள்ளதாக தெரியவருகிறது.
கம்பளை வைத்தியசாலையில் பல நாட்கள் சிகிச்சை பெற்ற குறித்த மாணவன் தற்போது வீடு திரும்பியுள்ளார்.
இருப்பினும் குறித்த சம்பவம் தொடர்பாக பாடசாலை நிர்வாகமும் பொலிசாரும் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.
பிரான்சில் இருந்து இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் கைது.
பிரான்சில் இருந்து இந்தியா சென்று இந்தியாவிலிருந்து கடல் மூலம் இலங்கை சென்ற புலம்பெயர் தமிழர்கள் இருவர் இலங்கை கடற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இந்த விடயம் தொடர்பில் மேலும் தெரியவருகையில்இ கைது செய்யப்பட்ட இருவரும் சட்டவிராதமாக பிரான்சில் இருந்து இந்தியாவிற்கு செல்லவில்லை என தெரியவந்துள்ளது.
இவர்கள் பிரான்சில் இருந்து இந்தியா சென்று கடல் மூலம் இலங்கை செல்ல முயன்ற போதே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளனர்.
பிரான்சில் அரசியல் தஞ்ச உறிமை பெற்ற ஒருவரால் இலங்கைக்கு செல்ல முடியாது என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.
'படலந்த ஆணைக்குழு அறிக்கை' இன்று(14) நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டது.
குறித்த அறிக்கையை சபை முதல்வர் அமைச்சர் பிமல் ரத்நாயக்க சமர்ப்பித்தார்.
இது தொடர்பில் நாடாளுமன்றத்தில் உரையாற்றிய அமைச்சர் ரத்நாயக்க,
படலந்த ஆணைக்குழு அறிக்கை தொடர்பாக நடவடிக்கை எடுப்பதற்காக ஜனாதிபதிஅனுரகுமார திசாநாயக்கவுடன் இணைந்து அமைச்சரவை ஒரு கொள்கை முடிவுஎடுத்துள்ளதாக தெரிவித்தார்.
அறிக்கை குறித்து பரிந்துரைகளை வழங்கவும்இ தேவையான ஆலோசனைகளுக்காக சட்டமாஅதிபருக்கு அனுப்பவும் ஒரு சிறப்புக் குழுவை நியமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக அவர்மேலும் தெரிவித்தார்.
தனித்துப் போட்டியிடுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளது.
தங்களுடைய தனித்துவத்தை இல்லாமலாக்கும் முயற்சியில் பிற கட்சிகள் செயற்பட்டமையினாலேயே இம்முறை உள்ளூராட்சி மன்ற தேர்தலில் தங்களது கட்சி தனித்துப் போட்டியிடுவதற்குத் தமிழ் மக்கள் கூட்டணி தீர்மானித்துள்ளதாக அதன் பொதுச்செயலாளரும் முன்னாள் பாராளுமன்ற உறுப்பினருமானசி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில் புதன்கிழமை செய்தியாளர் சந்திப்பில் கலந்து கொண்டு, அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
எவ்வாறாயினும், தேர்தல் முடிவடைந்ததன் பின்னர் எந்தக் கட்சியுடன் இணைவது என்பது தொடர்பில் ஆராய்ந்து தீர்மானம் எடுக்கப்படும் எனவும் முன்னாள்பாராளுமன்ற உறுப்பினர் சி.வி.விக்னேஸ்வரன் தெரிவித்துள்ளார்.
தேசிய மக்கள் சக்தி.
யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளிலும் தேசிய மக்கள் சக்தி ஆட்சி அமைக்கும் என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் நம்பிக்கை வெளியிட்டுள்ளார்.
உள்ளூர் அதிகார சபை தேர்தலுக்காக யாழ்ப்பாணத்தில் உள்ள 17 உள்ளூராட்சி சபைகளுக்குமான அங்கிகரிக்கப்பட்ட முகவர்களை நியமிக்கும் நடவடிக்கைகளுக்காக புதன்கிழமை (13) காலை யாழ்ப்பாணத்தில் உள்ள தேர்தல்கள் அலுவலகத்திற்கு வருகைதந்த போதே அமைச்சர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர்களான கருணைநாதன் இளங்குமரன்இ ஜெயச்சந்திரமூர்த்தி றஜீவன்இ சண்முகநாதன் ஸ்ரீபவனந்தராஜாஇ தொகுதி அமைப்பாளர்கள்இ கட்சி உறுப்பினர்கள் உள்ளிட சிலரும் வருகை தந்திருந்தனர்.