Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

உயர்தர பரீட்சை பெறுபேறுகள்: யாழ். இந்து கல்லூரியின் நிலை!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

யாழ்ப்பாணம் இந்துக் கல்லூரியின் உயர்தர பரீட்சை பெறுபேறுகள் வெளியாகியுள்ளன.

இதன்படி, விஞ்ஞான பிரிவில் 22 பேர் 3A சித்திகளையும் 13 பேர் 2A சித்திகளையும் 06 பேர் A2B சித்திகளையும் பெற்றுள்ளனர்.

அத்துடன், பௌதீக விஞ்ஞான பிரிவில் 27 பேர் 3A சித்திகளையும் 16 பேர் 2A சித்திகளையும் 11 பேர் A2B சித்திகளையும் அடைந்துள்ளனர்.

மேலும், வணிக பிரிவில் ஒருவர் 3A சித்திகளையும் 2 பேர் 2A சித்திகளையும் 2 பேர் A2B சித்திகளையும் பெற்றுள்ளனர். கலைப்பிரிவில் 02 பேர் 2A சித்திகளை அடைந்துள்ளனர்.

உயர்தர பரீட்சை பெறுபேறுகள்: யாழ். இந்து கல்லூரியின் நிலை | Jaffna Hindu College Al Results

இதேவேளை, B-Tech பிரிவிலும் E-Tech பிரிவிலும் தலா ஒருவர் 3A சித்திகளை பெற்றுள்ளனர்.

உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள்!

கல்விப் பொதுத்தராதர உயர்தரப் பரீட்சையின் பெறுபேறுகள் நேற்றைய தினம் பரீட்சைகள் திணைக்களத்தில் வெளியிடப்பட்டுள்ளது.

பரீட்சைகள் திணைக்களத்தின் Doenets.LK உத்தியோகபூர்வ இணையத்தளத்தின் மூலம் உயர்தரப் பரீட்சைப் பெறுபேறுகளைப் பார்வையிட முடியும் என திணைக்களம் தெரிவித்துள்ளது.

அதன்படி, 2024 ஆம் ஆண்டு உயர் தரப் பரீட்சையின் பெறுபேறுகளுக்கு அமைய, சிறந்த பெறுபேற்றை பெற்றவர்களின் விபரங்கள் தற்போது வெளியாகியுள்ளன.

உயிரியல் பிரிவில் குருநாகல் மலியதேவ மகளிர் வித்தியாலய மாணவி ஹேகொட ஆராச்சிகே சந்திதி நிம்ஹார நாடளாவிய ரீதியில் முதலிடத்தை பெற்றுள்ளார்.

உயர்தர பரீட்சையில் நாடளாவிய ரீதியில் முதலிடம் பெற்ற மாணவர்கள் | Island S Top Performers In 2024 Gce Al Examination

கணிதப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலித்தை கம்பஹா பண்டாரநாயக்க கல்லூரியின் மாணவன் லெந்து ரணசிங்க குமாரகே பெற்றுள்ளார்.

கொழும்பு விசாகா கல்லூாியின் மாணவி கங்கானிகே அமாஷா துலாரி பெரேரா, வணிகப் பிரிவில் நாட்டிலேயே முதலிடத்தைப் பெற்றுள்ளார்.

அதேநேரம், ரத்னாவலி பாலிகா வித்யாலய மாணவி செனெலி சமத்கா ரணசிங்க, கலைப் பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலாம் இடத்தை பெற்றுள்ளார்.

மேலும் குருநாகல், சந்தலங்கா மத்திய கல்லூரியின் மாணவி நெத்மி நவோத்யா, உயர்தர பரீட்சையில் உயிர் முறைமைகள் தொழில்நுட்ப பிரிவில் நாடளாவிய ரீதியில் முதலிடத்தைப் பெற்றுள்ளார்.