மாபெரும் வெற்றி! 7 நாட்களில் கருடன் திரைப்படம் செய்த வசூல்…
.
படம் வெளியான முதல் 7 நாட்களில் மட்டும் கருடன் திரைப்படம் ரூ.20 கோடியை கடந்து வசூல் செய்து சாதனை படைத்தது.
வெற்றிமாறனின் எழுத்தில், துரை செந்தில்குமார் இயக்கத்தில் உருவான திரைப்படம் கருடன். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா இசையமைத்திருக்கிறார். படத்தில் நடிகர்களாக முக்கிய கதாபாத்திரத்தில் சசிகுமார் மற்றும் சூரி நடிக்க, இவர்களுடன் உன்னி முகுந்தன், சமுத்திரகனி உட்பட பலரும் நடித்துள்ளனர்.மே 31-ம் தேதியான நேற்று திரையரங்கில் வெளியான இத்திரைப்படம் நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. ரசிகர்கள் கொண்டாடும் திரைப்படமாக மாறியுள்ள கருடன் படத்தில், நடிகர் சூரியின் நடிப்பு பெரிதளவில் பாராட்டப்பட்டு வருகிறது. இதனால் சூரியும் மிகுந்த மகிழ்ச்சிக்கு உள்ளாகி இருக்கிறார்.
கிட்டத்தட்ட 20 கோடி பட்ஜெட்டில் எடுக்கப்பட்ட இந்த திரைப்படம், இதுவரை 2 மடங்கு வசூலை எட்டி இருப்பதால் வெற்றிமாறன் மிகுந்த மகிழ்ச்சியில் இருக்கிறாராம். இதற்கு முக்கியமான காரணம் முதல் 4 நாட்களில் கிட்டத்தட்ட 15 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை தாண்டி விட்டதாம். இனியும் காமெடி ஹீரோவாக சூரி வருவதற்கு வாய்ப்பே இல்லை என்பதை உணர்த்தும் விதமாக இந்த கதையும் கதாபாத்திரங்களும் முக்கியமாக பார்க்கப்படுகிறது.