Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 14 வயதும் 6 மாதங்களும் கொண்ட சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தியுள்ளார்!

சிறுமியை வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய போது குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.

எதிர்வரும் 6 ம் திகதி நடைபெறவிருக்கும் உள்ளூராட்சி மன்ற தேர்தலில் சிறி லங்கா பொது ஜன பெரமுன கட்சியின் சார்பில் இலக்கம் 3 வெல்கொல்ல வட்டாரம் பசறை பிரதேச சபைக்கு போட்டியிடும் வேட்பாளர் ஒருவர் 14 வயதும் 6 மாதங்களும் கொண்ட சிறுமியை பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தினார் எனும் சந்தேகத்தின் பேரில் நேற்று  (03/05) கைது செய்யப்பட்டுள்ளதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.

கைது செய்யப்பட்ட நபர் 34 வயதுடைய சப்புகஸ்மட,நிகேபெத்த, பெல்காத்தன்ன பகுதியைச் சேர்ந்தவர் ஆவார்.

கடந்த வருடம் நவம்பர் மாதம் 26 திகதி குறித்த சிறுமி தனது வீட்டாருடன் முரண்பட்டு கொண்டு தனது வீட்டில் இருந்து வெளியேறியுள்ளதுடன் அன்று இரவு வீடு திரும்பவில்லை என நவம்பர் மாதம் 27 ம் திகதி குறித்த சிறுமியின் பெற்றோரினால் பசறை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

முறைப்பாடு அளித்து விட்டு வீடு சென்ற பெற்றோர் அங்கு தனது மகள் வீட்டுக்கு வந்திப்பதை அவதானித்து உள்ளனர் . பின்னர் 28 ம் திகதி மீண்டும் பசறை பொலிஸ் நிலையத்திற்கு சமூகமளித்த பெற்றோர் , தனது மகள் கவனமாக வீடு திரும்பியுள்ளதா  கூறி முறைப்பாட்டினை வாபஸ் பெற்றுக் கொண்டு சென்றுள்ளனர்.

கடந்த சில மாதங்களாக சிறுமியின்  நடத்தையில் சந்தேக ஏற்பட்டதாகவும்,  அதனால் இம்மாதம் சிறுமியை பதுளை பொது  வைத்தியசாலையில்   அனுமதிதனதாகவும் சிறுமியை  வைத்திய பரிசோதனைக்கு உட்படுத்திய   போது குறித்த சிறுமி பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது. 

இதன்போது சிறுமியிடம் விசாரணைகளை மேற்கொண்ட மகளிர் மற்றும் சிறுவர் நன்னடத்தை பிரிவு பொலிஸார் , குறித்த நபரினாலேயே தான் பாலியல் வல்லுறவுக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக குறித்த சிறுமி கூறியதைத் தொடர்ந்து மேற்குறிப்பிட்ட நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.

சந்தேக நபரை பசறை நீதிவான் முன்னிலையில் இன்றைய தினம் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பசறை பொலிஸார் தெரிவித்தனர்.