நான் அதிகம் படிக்காதவன். படித்தவர்கள் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காக போராடுங்கள் - தமிழ்வேந்தன்.
ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை!
வன்னியில் மிக மோசமக மக்களை கொண்று குவித்து இனப்படுகொலை செய்து கொண்டிருக்கின்றது சிங்கள அரசு. தமிழ் நாட்டு ஊடகங்கள் ஈழத்தமிழரின் அவலங்களை இருட்டடிப்புச் செய்வதோடு மடைமாற்றும் செய்திகளையும், நிகழ்ச்சிகளையும் ஒளிபரப்புச் செய்கின்றது.
உண்மை நிலை தெரிந்தவர்களும் எதுவும் செய்ய முடியாதவாறு திமுகா அரசு முடக்கிப் போட்டிருந்தது.
2009, பிப்ரவரி 18 அன்று மதியம் 2.30 மணியளவில் கடலூர் நீதிமன்ற அலுவலகத்துக்குள் மண்ணெண்ணெய் போத்தலுடன் வந்தார் கடலூர் குழந்தை காலனியை சேர்ந்த சோதி என்கிற தமிழ்வேந்தன்.
ஈழத்தமிழர்களுக்கு ஆதரவாக முழக்கங்கள் எழுப்பியபடியே உடலில் நெருப்பை மூட்டிக்கொண்டார். இதை பார்த்துக்கொண்டிருந்த மக்கள் தீயை அணைத்து அவரை மீட்டனர்.
சிகிற்சைக்காக கடலூரில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்க்கப்பட்ட தமிழ் வேந்தன். உயிருக்கு போராடி வந்த நிலையில் போலீசாரிடம் தனது தற்கொடை முயற்ச்சிக்கு காரணம் என்னவென வாக்குமூலம் கொடுத்தார்.
"வாக்குமூலத்தில் ஈழத்தமிழர்களைக் காப்பாற்ற எனக்கு வேறு வழி தெரியவில்லை. நான் அதிகம் படிக்காதவன். படித்தவர்கள் தொடர்ந்து ஈழத்தமிழர்களுக்காக போராடுங்கள் என்று கூறினார்.
தமிழ்வேந்தனின் சிகிச்சை பலனின்றி இரவு 1.20 மணியளவில் மருத்துவமனையில் வைத்து காலமானார். தமிழ்வேந்தனுக்கு 7 மாதமே ஆன கைக்குழந்தை இருந்தது.
தமிழ் மக்கள் மீதான, சிங்கள பௌத்த பேரினவாத இராணுவத்தின் இனவழிப்புப்போரை நிறுத்தக்கோரி தன்னுயிரை ஆகுதியாக்கிய தமிழ்வேந்தனை இன்னாளில் நினைவேந்துவோம்.


