Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

முதல் நூறு நாட்களில் அரசாங்கம் தோல்வியடைந்துள்ளது! - கயந்த கருணாதிலக்க.

.

அரசாங்கம் முதல் நூறு நாட்களில் தோல்வியடைந்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

மேலும் தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் ஆட்சிப் பொறுப்பினை ஏற்றுக்கொண்டு 100 நாட்கள் கடந்து விட்டதாக ஐக்கிய மக்கள் சக்தியின் நாடாளுமன்ற உறுப்பினர் கயந்த கருணாதிலக்க தெரிவித்துள்ளார்.

இக் கட்சியின் தலைமைக் காரியாலயத்தில் இடம் பெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.இருப்பினும், முதல் 100 நாட்களை பூர்த்தி செய்த அரசாங்கங்களில் மிகவும் தோல்வியடைந்த அரசாங்கமாக இந்த அரசாங்கம் அமைந்துள்ளது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

தேர்தல் மேடைகளில் 24 மணித்தியாலங்களில், ஒரு கையொப்பத்தில் மக்களுக்கு நிவாரணங்களை வழங்குவதாக உறுதிமொழி வழங்கிய அரசாங்கம் அதனை செய்யத் தவறியுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

மேலும் எரிபொருள் விலையை குறைப்பதாக விளக்கமாக பேசிய அரசாங்கம் இன்று மௌனித்திருப்பதாகத் தெரிவித்துள்ளார்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மை பலத்தைக் கொண்ட அரசாங்கத்தினால் செய்ய முடியாத காரியங்களை நல்லாட்சி அரசாங்கம் மேற்கொண்டிருந்தது என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

இவ் அரசாங்கம் மக்களுக்கு வழங்கிய எந்தவொரு உறுதிமொழியும் நிறைவேற்றப்படவில்லை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.