Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ; ட்ரம்ப் வெளியிட்ட முக்கிய உத்தரவு

.

டிக் டாக் எனப்படும் மொபைல் போன் செயலி உலகளவில் பிரபலமாக உள்ளது.  சீனாவைச் சேர்ந்த பைட்டான்ஸ் என்ற நிறுவனம் இச்செயலியை நிர்வகித்து வருகிறது.  அமெரிக்காவில் 17 கோடிக்கும் அதிகமானோர் இந்தச் செயலியை பயன்படுத்தி வருகின்றனர். 

இந்தச் செயலிக்கு ஜோ பைடன் அரசு தடை விதித்தது. இதையடுத்து, பாதுகாப்பு காரணங்களைச் சுட்டிக்காட்டி சீன செயலியான டிக்டாக்கிற்கு எதிராக அமெரிக்க நாடாளுமன்றத்தில் சட்டம் நிறைவேற்றப்பட்டுள்ளது.

டிக்டாக் செயலிக்கு தடை 

 இதை எதிர்த்து அமெரிக்க சுப்ரீம் கோர்ட்டில் டிக் டாக் நிறுவனம் வழக்கு தொடர்ந்தது. இந்த வழக்கை தள்ளுபடி செய்த கோர்ட், இது குறித்து கொண்டு வரப்பட்ட சட்டமானது பேச்சுரிமைக்கான அரசின் கட்டுப்பாடுகள் தொடர்பான அரசியலமைப்பை மீறவில்லை என கூறியுள்ளது.

அமெரிக்காவில் டிக்டாக் செயலிக்கு விதிக்கப்பட்ட தடை ஜனவரி 19 முதல் அமலில் உள்ள நிலையில் தற்காலிகமாக டிக்டாக் செயலியின் சேவையை நிறுத்துவதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.

இந்நிலையில், டிக்டாக் செயலிக்கு வழங்கப்பட்ட கெடுவை மேலும் 75 நாட்களுக்கு நீட்டிப்பு செய்து  டிரம்ப் உத்தரவிட்டுள்ளார்.