Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

நடிகை வனிதா - “விஜய், உதயநிதி இருவருமே சினிமாவில் இருந்து அரசியல் வந்தவர்கள்தான்”.

.

உலகப் புகழ் பெற்ற தஞ்சை பெரிய கோயிலில் நடிகை வனிதா விஜயகுமார் இன்று சுவாமி தரிசனம் செய்தார். அப்போது செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த அவர் கூறுகையில், “எனது குடும்பத்தின் பூர்வீகமான ஊர் தஞ்சாவூர். நான் இதுவரை தஞ்சாவூர் பெரிய கோயிலுக்கு வந்ததில்லை. எனது அப்பா ராஜராஜ சோழன் பற்றி நிறைய கதைகள் சொல்வார். ஜோவிகா தயாரிப்பில் நான் முதன் முறையாக இயக்கிய படம் விரைவில் திரைக்கு வர உள்ளது.

விஜய் அரசியலுக்கு வந்ததற்கு வாழ்த்துகள். அரசியலில் புதிய பரிமாணம் எடுத்துள்ளார். விஜய் பெரிய வெற்றியை அடையனும். விஜயும், உதயநிதியும் சினிமாவிலிருந்து வந்தவர்கள் தான். இரண்டு பேரும் எதிரிகள் போல உள்ளனர். விஜய், உதயநிதி இருவருமே எனக்கு நண்பர்கள் தான், நல்ல தமிழகம் அமைவதற்கு யார் வந்தாலும் நான் ஆதரிப்பேன்” என்று கூறினார்.