எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் அனுரகுமார திஸாநாயக்க வெற்றியடைய வேண்டும் என ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க விரும்புவதாக நாடாளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
“அநுராவை ஜனாதிபதியாக்க விரும்பும் ரணில்”
“அநுராவை ஜனாதிபதியாக்க விரும்பும் ரணில்”
இணைய ஊடகம் ஒன்றில் இடம்பெற்ற நிகழ்ச்சியில் கருத்து வெளியிட்ட அவர் இதனை தெரிவித்துள்ளார்.
“எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற முடியாது என்பது ரணில் விக்கிரமசிங்கவுக்கு நன்றாகத் தெரியும் என டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
இதனால் அநுர திஸாநாயக்க ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டால் நாடு சீர்குலையும் என்பதை ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க நன்கு அறிந்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவை ஜனாதிபதி பதவியில் இருந்து நீக்கியது போன்று, மக்கள் போராட்டத்தின் மூலம் சில சக்திகள் அநுர திஸாநாயக்கவை ஜனாதிபதி பதவியில் இருந்து அகற்ற தயாராகும்.
ஜனாதிபதியாக அநுர திஸாநாயக்க தோல்வியடைந்ததன் பின்னர் ரணில் விக்ரமசிங்க எவ்வாறு நாட்டை மீட்டெடுத்தார் என்பதை மக்களுக்கு உணர்த்தும் செயற்பாடுகள் இடம்பெறும் எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
அதற்கமைவாக ரணில் விக்கிரமசிங்கவே இந்த நாட்டின் ஜனாதிபதியாக மீண்டும் தெரிவுசெய்யப்படுவார் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா தெரிவித்துள்ளார்.
எவ்வாறாயினும், சஜித் பிரேமதாச ஜனாதிபதியானால் இந்த செயற்பாடுகள் நடக்காது என்பது ரணில் விக்கிரமசிங்கவிற்கு நன்றாக தெரியும் எனவும் பாராளுமன்ற உறுப்பினர் டிலான் பெரேரா மேலும் தெரிவித்துள்ளார்.