Breaking News
திரும்பிப் பார்ப்போம்...முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கி 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் இருந்த இரா.பொ.இரவிச்சந்திரன்.
.
முன்னாள் பிரதமர் ராஜிவ் காந்தியின் கொலை வழக்கில் சிக்கி 32 ஆண்டுகள் கொடுஞ்சிறையில் இருந்த இரா.பொ.இரவிச்சந்திரன் அவர்களின் ‘காரா’பதிப்பகம் திறப்பு விழாவிற்கு பிறகு, பேசிக் கொண்டிருந்தோம். உங்களுடைய 16 வயதில், விருதுநகரிலிருந்து இராமேஸ்வரம் கடல் வழியாக பயணப்பட்டு விடுதலைப் போராட்ட இயக்கத்தில் போய் சேர்ந்தீர்கள் அல்லவா, அந்த பயணப் பாதையை மீண்டும் எப்போதாவது பார்த்துள்ளீர்களா? என்று பேசிக் கொண்டிருந்தோம்.இன்னும் இல்லையே, அந்த இடத்தை எல்லாம் மீண்டும் பார்க்க வேண்டும் என்று ஆசைதான் என்றார் இரா.பொ.இரவி. அப்போதே பேசி முடிவெடுத்து ராமேஸ்வரம் பயணப் பட்டோம்.இது ஒரு வலிநிறைந்த பயண உரையாடல்...