Breaking News
வவுனியாவில் யானை தாக்கியதில் பெண் பலி!
.
வவுனியாவில் யானை தாக்கியதில் பெண் பலி!
வவுனியா பிரப்பமடு பகுயில் இன்று (31.08) பிற்பகல் வேலையில் பெண் ஒருவரை யானை தாக்கியதில் குறித்த பெண் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளார். வவுனியா மாமடு பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரப்பமடு பகுதியில் வசிக்கும் 55 வயதுடைய பெண் ஒருவர் இன்று பிற்பகல் தனது மாடுகளை மேய்ச்சல் தரையிலிருந்து அழைத்து செல்வதற்காக சென்றிருந்த வேளையிலேயே காட்டு யானையால் தாக்குதாக்குலக்குள்ளாகி உள்ளதாக பொலிஸார் தெரிவிக்கின்றனர். தற்சமயம் இறந்தவரின் சடலம் வவுனியா பொதுவைத்தியசாலைக்கு கொண்டுவரப்பட்டுள்ள நிலையில், மாமடு பொலிஸார் மேலதிக விசாரனைகளை மேற்கொண்டு வருகின்றனர்.