Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திருகோணமலை புத்தர்சிலை விவகாரம்: 4 தேரர்கள் உட்பட 10 பேருக்கும் மீண்டும் விளக்கமறியல்!

​கடந்த 2025 நவம்பர் 16ஆம் தேதி, திருகோணமலை நகரின் கடற்கரை ஓரத்தில் ஒரு குழுவினருடன் இணைந்த பௌத்த பிக்குகள், விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

​திருகோணமலை கடற்கரை பகுதியில் உரிய அனுமதியின்றி புத்தர் சிலை அமைத்த விவகாரம் குறித்த வழக்கு, பெப்ரவரி 2 ஆம் தேதி விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் என திருகோணமலை நீதவான் நீதிமன்றம் இன்று (28) உத்தரவிட்டுள்ளது. 
​நீதவான் எம்.என்.எம்.சம்சுதீன் முன்னிலையில் இந்த வழக்கு இன்று விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

ஏற்கனவே ஜனவரி 19ஆம் தேதி ஆஜர்படுத்தப்பட்டபோது, இன்று (28) வரை விளக்கமறியல் விதிக்கப்பட்டிருந்தது. இன்று மீண்டும் விசாரணைக்கு வந்த நிலையில், சந்தேக நபர்களின் பிணைக்கோரிக்கையை நிராகரித்த நீதிபதி, விளக்கமறியலை நீட்டித்து உத்தரவிட்டார்.
​கடந்த 2025 நவம்பர் 16ஆம் தேதி, திருகோணமலை நகரின் கடற்கரை ஓரத்தில் ஒரு குழுவினருடன் இணைந்த பௌத்த பிக்குகள், விகாரை அமைப்பதற்காக அடிக்கல் நாட்டி புத்தர் சிலையை பிரதிஷ்டை செய்தனர்.

​குறித்த பகுதி கரையோர பாதுகாப்புத் திணைக்களத்திற்குச் சொந்தமானது.
​கட்டுமானத்திற்கு நகரசபை அல்லது திணைக்களத்திடம் எவ்வித சட்டபூர்வ அனுமதியும் பெறப்படவில்லை.

​இதனால் இனங்களுக்கு இடையிலான நல்லிணக்கம் பாதிக்கப்படுவதாக சிவில் அமைப்புகள் குற்றஞ்சாட்டின.
​வழக்கு விசாரணையை ஒட்டி திருகோணமலை நகரம் முழுவதும் பொலிஸாரும் பாதுகாப்புப் படையினரும் குவிக்கப்பட்டு தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டனர்.