Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

அமெரிக்க ஜனாதிபதி மற்றும் துணை ஜனாதிபதி குறித்த பதிவுக்காக எலான் மஸ்க்குக்கு கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம்!

.

சர்ச்சைக்குரிய பதிவுகள்; எலான் மஸ்க்குக்கு 5 ஆண்டுகள் சிறை தண்டனையா?

அமெரிக்காவில் நவம்பர் மாதம் ஜனாதிபதி தேர்தல் நடைபெற உள்ளது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சியின் வேட்பாளராக அமெரிக்க முன்னாள் ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் களமிறங்கி உள்ளார்.

ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபர் கமலா ஹாரிஸ் போட்டியிருகிறார். தேர்தல் நெருங்கியுள்ளதை அடுத்து தேர்தல் பிரச்சாரம் சூடுபிடித்துள்ளது. இந்த சூழலில், கடந்த 15ம் தேதி புளோரிடா கோல்ப் கிளப்பில் விளையாட டிரம்ப் சென்றார். அப்போது அங்கு திடீரென துப்பாக்கி சுடும் சத்தம் கேட்டது.

இதனையடுத்து, அதிகாரிகள் டிரம்பை அங்கிருந்து பாதுகாப்பாக அனுப்பி வைத்தனர். மேலும், அதிபர் வேட்பாளர் டிரம்ப் பாதுகாப்பாக உள்ளார் என அவரது கட்சி எக்ஸ் தளத்தில் பதிவிட்டது. முன்னதாக, கடந்த ஜூலை மாதம் பென்சில்வேனியாவில் தோ்தல் பிரசாரத்தில் டிரம்ப் ஈடுபட்டிருந்தபோது அவா் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டதும், அதில் அவருடைய வலதுகாதில் காயம் ஏற்பட்டதும் குறிப்பிடத்தக்கது.

தற்போது இரண்டாவது முறையாக நடைபெற்ற இந்த துப்பாக்கிச்சூடு சம்பவம் பெரும் பரபரப்பு ஏற்படுத்தியது.

இந்த சூழலில், இந்த துப்பாக்கிச் சூடு சம்பவத்துக்கு கண்டனம் தெரிவித்த ஒருவர், டொனால்டு டிரம்ப்பை ஏன் கொல்ல முயற்சிக்கின்றனர்? என்று எக்ஸ் தள பக்கத்தில் கேள்வி எழுப்பி இருந்தார். அதனைப் பகிர்ந்த பிரபல உலக பணக்காரரும் டெஸ்லா மற்றும் எக்ஸ் தளத்தின் உரிமையாளருமான எலான் மஸ்க், “பைடன் மற்றும் கமலாவை கொல்வதற்கு யாரும் முயற்சிகூட செய்யவில்லை” என்று தெரிவித்திருந்தார்.

எலான் மஸ்கின் இந்த கருத்துக்கு பயனர்கள் பலரும் எதிர்ப்பு தெரிவித்து வந்தனர். இதனையடுத்து, நகைச்சுவையாக பதிவிட்டதாகக் கூறிய எலான் மஸ்க், அப்பதிவினை நீக்கிவிட்டார். இருப்பினும், அமெரிக்க அதிபர் மற்றும் துணை அதிபரை, வெளிப்படையாக அச்சுறுத்தியதற்காக எலான் மஸ்க் மீது 5 ஆண்டுகள் வரையிலான கடுமையான சிறைத்தண்டனை விதிக்கப்படலாம் என்று கூறப்படுகிறது.