பார் குமார்…. குடு திகா….: தொலைக்காட்சி விவாதத்தில் அடித்துக்கொண்ட தமிழ் எம்.பிகள்
.
தொலைக்காட்சி விவாதம் ஒன்றில் தமிழ் நாடாளுமன்ற உறுப்பினர்கள் இருவர் கைகலப்பில் ஈடுபட்ட காணொளி தற்போது சமூக ஊடகங்கள் வைரலாகியுள்ளது.
பிரபல தமிழ் தொலைக்காச்சியில் ஒளிபரப்பாகவிருந்த அரசியல் நிகழ்ச்சியின் பதிவின் போது, நாடாளுமன்ற உறுப்பினர்களான பழனி திகாம்பரம் மற்றும் வேலு குமார் இடையே வாக்குவாதம் முற்றியது.
ஒரு கட்டத்தில் இந்த வாக்குவாதம் முற்றி, இருவரும் ஒருவரை ஒருவர் தாக்கிக்கொண்டனர்.
இதன்போது நிகழ்ச்சி தொகுப்பாளர்களும், ஒருங்கிணைப்பாளர்களும் தலையிட்டு இருவரையும் கட்டுப்படுத்தினர்.
இந்த விவாதத்தின் போது திகாம்பரம் எம்.பி, வேலுகுமார் எம்.பியை பார் குமார் என்று திட்டினார்.
பதிலுக்கு வேலுகுமார் எம்.பி, குடு திகா என்று திட்டினார். இதனால் இருவருக்கு வாக்குவாதம் முற்றியது.
இதேவேளை, நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவிற்கு ஆதரவளிப்பதாக அறிவித்திருந்தார்.
இதனையடுத்து நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார், கட்சி மற்றும் கூட்டணி பதவிகளில் இருந்து உடனடியாக அமுலுக்கு வரும் வகையில் வெளியேற்றப்பட்டிருந்தார்.
எவ்வாறாயினும், நாடாளுமன்ற உறுப்பினர் திகாம்பரம் தமிழ் மக்கள் முன்னணியின் தலைவர் மனோ கணேசனுடன் இணைந்து எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவிற்கு ஆதரவை வெளிப்படுத்தினார்.