Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

திருமலையில் நெல்லிக்குளம் மலை உடைப்புக்கு மக்கள் எதிர்ப்பு..!

.

 

திருகோணமலை மாவட்டத்தின் மூதூர் கிழக்கு,  சேனையூர் கிராம சேவகர் பிரிவில் உள்ள நெல்லிக்குளம் மலைத் தொடரின் பாறைகளை உடைப்பதற்கு  சனிக்கிழமை (08) பாறை உடைப்பு இயந்திரத்துடன் உடைப்பு வேலைகளை ஆரம்பிக்க முயன்ற போது அப்பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.

இதனால் உடைப்பு வேலைகள் நிறுத்தப்பட்டுள்ளன.

ஆனால் உடைப்பு இயந்திரம் அப்பகுதியில் இருந்து இன்னும் அகற்றப்படவில்லை. இவ்விடயம் சம்மந்தமாக சேனையூர் கிராம அபிவிருத்தி சங்க தலைவர் பொலியில் முறைப்பாடு செய்ததாக தெரிவித்தார்.

நேற்று ஞாயிற்றுக்கிழமை (09) அப்பகுதியில் மக்கள்  கூடி நின்றனர் மக்கள் கருத்து தெரிவிக்கையில்,

நாட்டின் ஏனைய பிரதேசங்களின் அபிவிருத்திக்காக எமது வாழ்வாதரத்தினை அழித் தொழிக்கும் நடவடிக்கையினை உடன் நிறுத்த வேண்டும். வாழ்வாதாரத்தினை பாதிக்கும் வகையில் மலைகளை உடைப்பதற்கு அனுமதி வழக்கியது யார் என்ற கேள்வியை எமுப்பினர்.

சேனையூர் கிராம அபிவிருத்தி சங்கத் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,

நாளாந்தம். கூலித் தொழிலையும்,  நெற்செய்கை,  கால் நடை வளர்ப்பு போன்ற வாழ்வாதார முயற்சிகளை நம்பி வாழ்ந்து வரும் மக்கள்தான் இப் பகுதியில் இருக்கின்றனர்.

குளம்,  வயல்,  காடு போன்ற வளங்களையே நம்பி வாழ்கின்றனர் மலையைச் சூழவுள்ள வயல்கள்,  மேச்சல் தரை இயற்கைக் காட்டு வளம் என்பன கல்லுடைப்பால் அழிவுறும் அபாயம் ஏற்படும் என்றார்.

இவ் மலையில் இந்து வழிபாட்டு அடையாளங்களும் கானப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.