சுதந்திர தினத்தை முன்னிட்டு நல்லூரிலும் போராட்டம்!
,
இலங்கையின் 77வது சுதந்திர தினம் இன்று கொண்டாடப்பட்டு வரும் நிலையில், சுதந்திர தினத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து சில இடங்களில் கறுப்பு கொடி ஏந்தி போராட்டம் முன்னெடுக்கப்பட்டு வருகின்றது.
அந்தவகையில் 77ஆவது சுதந்திர நாளான இன்றைய தினத்தில் ‘இலங்கையின் சுதந்திர நாள் தமிழர் தாயகத்தின் கரிநாள்’ என தெரிவித்து, தமிழினப் படுகொலைக்கு நீதி கோரி வடக்கு – கிழக்கு காணாமல் ஆக்கப்பட்டோர் சங்கத்தின் ஏற்பாட்டில் கிளிநொச்சியில் கறுப்புகொடி ஏந்தி மாபெரும் போராட்டம் இடம்பெற்றிருந்தது.
இதேவேளை நல்லூரிலும் போராட்டம் முன்னெடுக்கப்பட்டுள்ளது. நல்லூர் பின் வீதியில் அமைந்துள்ள தியாக தீபம் திலீபனின் நினைவுத் தூபிக்கு முன்பாக, பொத்துவில் தொடக்கம் பொலிகண்டிவரையான மக்கள் இயக்கத்தின் ஏற்பாட்டில் இந்த போராட்டம் முன்னெடுக்கப்பட்டது.
இந்த போராட்டத்தில், சிவகுரு ஆதீனத்தின் ஆதீன குரு முதல்வர் தவத்திரு வேலன் சுவாமிகள் உள்ளிட்டவர்கள் கலந்துகொண்டனர்.