Breaking News
வெளிநாட்டில் கைது செய்யப்பட்ட நித்யானந்தாவின் சீடர்கள்.. காரணம் என்ன?
,
தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில், பழங்குடியினரின் பல ஏக்கர் நிலத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு நித்யானந்தா ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.
பொலிவியாவில் பழங்குடியினர் நிலத்தை ஆக்கிரமித்ததாகக் கூறி, நித்யானந்தாவின் சீடர்கள் 20 பேர் கைது செய்யப்பட்டனர்.
பாலியல் வழக்குகளில் சிக்கிய சாமியார் நித்யானந்தா, இந்தியாவில் இருந்து தப்பிச் சென்று தலைமறைவானார். ஈக்வடார் நாட்டில் உள்ள தீவு ஒன்றை விலைக்கு வாங்கி, அதற்கு கைலாசா என்று பெயரிட்டு, தனி நாட்டை உருவாக்கி இருப்பதாக அறிவித்தார். இந்நிலையில், தென் அமெரிக்க நாடான பொலிவியாவில் உள்ள அமேசான் காட்டில், பழங்குடியினரின் பல ஏக்கர் நிலத்தை, ஆயிரம் ஆண்டுகளுக்கு நித்யானந்தா ஒப்பந்தம் போட்டதாகக் கூறப்படுகிறது.
இதனையடுத்து அங்கு சென்ற நித்யானந்தா சீடர்கள், ஆன்மீக செயல்பாடுகளில் ஈடுபட்டு உள்ளனர். இதனை அறிந்த பொலிவியா அரசு, பழங்குடியின மக்களின் நிலத்தை நித்யானந்தா அபகரிக்க முயன்றதாகக் கூறி, ஒப்பந்தம் செல்லாது என அறிவித்தது. மேலும், அங்கு தங்கி இருந்த நித்யானந்தா சீடர்கள் 20 பேர் கடந்த சில நாட்களுக்கு முன்பு கைது செய்யப்பட்டனர்.