Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை

சுகாதாரப் பிரச்சினைகள், பதவி உயர்வுகளில் தாமதம், சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 5 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள்!

நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்களால் ஆரம்பிக்கப்பட்ட தொழிற்சங்க நடவடிக்கை இன்று (7) காலை 8 மணிக்கு நிறைவுக்கு வந்துள்ளது. அந்த வகையில், தங்களது 5 சங்கங்களில் 4 சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் தெரிவித்துள்ளது.

நோயாளர்களுக்கு ஏற்படும் சிரமத்தைக் கருத்திற்கொண்டு வேலைநிறுத்தத்தை முடிவுக்குக் கொண்டுவர தீர்மானித்ததாக நிறைவுகாண் மருத்துவ தொழில் வல்லுநர்கள் ஒன்றியத்தின் செயலாளர் சானக தர்மவிக்ரம தெரிவித்தார்.

இருப்பினும், மருத்துவ ஆய்வக வல்லுநர்கள் தொடர்ந்து வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவார்கள் என்றும் அவர் குறிப்பிட்டார்.

சுகாதாரப் பிரச்சினைகள், பதவி உயர்வுகளில் தாமதம், சம்பள முரண்பாடுகள் உள்ளிட்ட 5 பிரச்சினைகளை அடிப்படையாகக் கொண்டு, நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் நேற்று முன்தினம் (05) காலை 8 மணிக்கு ஒரு நாள் வேலைநிறுத்தத்தைத் தொடங்கியது.

இது நோயாளர்களுக்கு கடுமையான அசௌகரியத்தை ஏற்படுத்தியது.

இத்தகைய பின்னணி இருந்த போதிலும், சுகாதார அமைச்சர் சம்பந்தப்பட்ட பிரச்சினைகளைத் தீர்ப்பதற்கு முன்வரமாட்டார் என தெரிவித்தே, வேலைநிறுத்தத்தைத் தொடர்ந்து முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டது.

இருப்பினும், 5 தொழிற்சங்கங்களில் 4 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தப் போராட்டத்தை முடிவுக்குக் கொண்டுவர முடிவு செய்துள்ளதாக நிறைவுகாண் தொழில் மருத்துவ வல்லுநர்கள் ஒன்றியம் மேலும் தெரிவித்துள்ளது