Breaking News
ஜனாதிபதி பயணித்த ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கம்: காரணம் என்ன?
.
ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்கவை அழைத்துச் சென்ற ஹெலிகொப்டர் அவசரமாக தரையிறக்கப்பட்டதைத் தொடர்ந்து விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன.
இலங்கை விமானப்படையின் பெல் 412 (SUH 522) அநுராதபுரம் எப்பாவல பகுதியில் உள்ள நெல் வயல் ஒன்றில் நேற்று திடீரென தரையிறங்கியது.
ஆனால் எதுவித உயிர் சேதமோ, பொருள் சேதமோ ஏற்படவில்லை.
அவசர தரையிறக்கத்திற்கான காரணம் குறித்து விமானப்படையினர் விசாரணை மேற்கொண்டு வருவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஹெலிகொப்டரில் தொழில்நுட்பக் கோளாறு ஏற்பட்டதாக ஜனாதிபதியின் பாதுகாப்புப் பிரிவின் உயர் அதிகாரி ஒருவர் லங்காதீபவிடம் தெரிவித்துள்ளதாக கூறப்படுகிறது.
ஒரு மணி நேரத்தின் பின்னர் ஹெலிகொப்டர் மீண்டும் கொழும்புக்கு சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.