Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு; தொடர்ந்தும் பயணிகள் ஏமாற்றம்.

.

நாகப்பட்டினம் – காங்கேசன்துறை கப்பல் சேவை மீண்டும் ஒத்திவைப்பு; தொடர்ந்தும் பயணிகள் ஏமாற்றம்.

நாகப்பட்டினத்திலிருந்து காங்கேசன்துறை வரையான கப்பல் சேவை எதிர்வரும் 19 ஆம் திகதிக்கு ஒத்தவைக்கப்பட்டுள்ளது.

‘சிவகங்கை’ கப்பல் இந்த மாதத்தின் முதல் வாரத்தில் அந்தமானிலிருந்து சென்னை நோக்கி புறப்பட்டு மறுசீரமைப்புப் பணிகளை நிறைவு செய்ததையடுத்து நாகை செல்லும் என தெரிவிக்கப்பட்டது.

இதன்பின்னர் கப்பல் கடந்த 11 ஆம் திகதி காங்கேசன்துறைக்கு பரீட்சார்த்த சேவையில் ஈடுபட்டதையடுத்து கடந்த 13ஆம் திகதி முதல் ஒவ்வொரு நாளும் கப்பல் சேவை ஆரம்பமாகும் என அறிவிக்கப்பட்டது.

ஆனால் கப்பல், நாகைக்கு செல்வதில் ஏற்பட்ட தாமதம் காரணமாக நாளை வெள்ளிக்கிழமை (17) முதல் பயணிகள் கப்பல் சேவை ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில் மீண்டும் அதே காரணத்தால் சேவை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த அறிவிப்பால் யாழ்ப்பாணம் செல்லவிருந்த சுற்றுலா பயணிகள் மற்றும் வர்த்தகர்கள் ஏமாற்றம் அடைந்துள்ளனர்.முன்பதிவு செய்த பயணிகள் பயண திகதியை மாற்றியமைக்க முடியும் எனவும் கட்டணத்தை திரும்ப பெற்று கொள்ளவும் முடியும் என அறிவிக்கப்பட்டுள்ளது.l

 

 

 

.