Breaking News
செம்மணி: 'நாங்கள் இன்னும் தேடிக்கொண்டிருக்கின்றோம்'! ​அறவழிப் போராட்டம் இன்று 13 ஆவது வாரமாகத் தொடர்கிறது! ஆடி மாதத்தின் முதல் நாளை வரவேற்கும் கொள்ளையடிக்கப்பட்ட தங்க நகைகள் எங்கே? அரசாங்கம் விசாரணைகளை மேற்கொள்ளுமா? வடகிழக்கு ஆயர்களிடம் சுரேஸ் பிறேமச்சந்திரன் வேண்டுகோள்! இலங்கை சிறைச்சாலை வன்முறை: மரணங்கள் குறித்து உடனடி விசாரணைக்கு சர்வதேச அமைப்புகள் அழைப்பு! சுற்றுச்சூழல் பாதுகாப்பை காரணம் காட்டி மக்களின் வழிபாட்டு உரிமை மறுக்கப்படுகிறதா? நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்!

இந்த மண் எங்களின் சொந்த மண், சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா?

போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர்

தையிட்டி சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிராக மக்கள் ஆர்ப்பாட்டம்!

சட்டவிரோத திஸ்ஸ விகாரைக்கு எதிரான போராட்டமானது ஒரு வருடத்தை தாண்டிய நிலையில் முன்னெடுக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றது.

இந் நிலையில் 23 ஆம் திகதி வியாழக்கிழமை பௌர்ணமி தின வழிபாடுகள் ஆரம்பமாக இருந்த நிலையில் 22 ஆம் திகதி புதன்கிழமை போராட்டம் ஆரம்பமானது. இந்நிலையில் வியாழக்கிழமை (23) தென் பகுதியில் இருந்து மக்கள் குறித்த விகாரைக்கு வழிபாடுகளை மேற்கொள்வதற்காக வருகை தந்திருந்தனர்.இதன்போது பல நூற்றுக்கணக்கான மக்கள் அணி திரண்டு, அனுமதியின்றி மக்களது காணியில் கட்டப்பட்ட குறித்த சட்டவிரோத விகாரையை அகற்றுமாறு கோரி போராட்டத்தினை முன்னெடுத்தனர். இதன்போது போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் “தையிட்டி எங்கள் சொத்து, வடக்கு கிழக்கும் தமிழர் தாயகம், மண் துறந்த புத்தருக்கு மண் மீது ஆசையா, பலாலி பொலிஸ் பொறுப்பு அதிகாரி ஒரு கொலைகாரன், பௌத்தத்தின் பெயரால் காணிகளை அபகரிக்காதே, இந்த மண் எங்களின் சொந்த மண், சட்டவிரோத விகாரைக்கு காவல்துறை காவலா, பௌத்தத்தின் போதனை சட்டவிரோத ஆக்கிரமிப்பா” என கோஷங்களை எழுப்பியவாறு போராட்டத்தில் ஈடுபட்டனர். 

 

இந்த போராட்டமானது எதிர்வரும் வெள்ளிக்கிழமை வரை தொடரும் என ஏற்பாட்டாளர்கள் தெரிவித்துள்ளனர். இந்த போராட்டத்தில் தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான செல்வராஜா கஜேந்திரன், தமிழ்த் தேசிய மக்கள் முன்னணியின் ஊடகப் பேச்சாளர் கனகரத்தினம் சுகாஷ், காணியின் உரிமையாளர்கள், கட்சியின் உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்கள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.