Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் சிறந்த முறையில் கற்றுக் கொள்கிறோம்

.

எமக்கு பாடம் கற்பிப்பது மக்களுக்கு அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக் கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக் கொள்ள தயாராகுவேன்.

நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம். புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட நாமல் ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

தேர்தலில் தனக்கு ஆதரவளித்தவர்களுக்கு நன்றி தெரிவித்து வெளியிட்டுள்ள அறிக்கையில் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.

அந்த அறிக்கையில் மேலும் குறிப்பிடப்பட்டுள்ளதாவது,

ஜனாதிபதித் தேர்தலில் ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன மீதும், என்மீதும் நம்பிக்கை வைத்து வாக்களித்த அனைவருக்கும் நன்றியினை தெரிவித்துக் கொள்கிறேன்.

‘உங்களுக்கான சிறந்த நாடு’ என்ற இலக்கை அடைவதற்காக முன்வைத்த கொள்கைத் திட்டங்களை ஏற்றுக்கொண்ட ஒரு தரப்பினரை மறக்க முடியாது.

எதிர்க்கட்சிகள் அன்று புறக்கணித்த 69 இலட்ச மக்களாணை இம்முறை ஜனாதிபதித் தேர்தலில் தீர்மானமிக்கதாக காணப்படுவதை ஜனாதிபதி தேர்தல் வாக்குகள் ஊடாக அவதானிக்க முடிகிறது.

அரசியல் சேறு பூசல்கள் மற்றும அரசியல் வாக்குறுதிகள் ஏதும் இல்லாமல் ஜனாதிபதி வேட்பாளராக புதிய அரசியல் கலாச்சாரத்தை தோற்றுவிக்கும் வகையில் இளைஞர் யுவதிகளை முன்னிலைப்படுத்தி செயற்பட்டேன் என்று நம்புகிறேன்.

ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட்ட என்னை அன்புடன் ஏற்றுக் கொண்டீர்கள். ஒருசிலர் இம்முறை ஜனாதிபதி தேர்தலில் வாக்களிக்கவில்லை.இருப்பினும் அவர்கள் எமது கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ளனர்.

எமக்கு பாடம் கற்பிப்பது அவசியமாயின் அந்த பாடத்தை சிறந்த முறையில் கற்றுக் கொண்டு மீண்டும் சவால்களை வெற்றிக் கொள்ள தயாராகுவேன்.

நாட்டுக்காகவும், நாட்டு மக்களின் நலனுக்காகவும் முன்னெடுக்கும் சிறந்த தீர்மானங்களுக்கு முழுமையான ஒத்துழைப்பை வழங்குவோம்.புதிய ஜனாதிபதிக்கு வாழ்த்து தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்.