Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

அறவழியை அன்று இந்தியா ஏற்க மறுத்தது. அதன் விளைவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை பாரிய யுத்தத்திற்கு முகங்கொடுத்தது.

அன்னையின் விடயத்தில் இந்தியா விட்ட தவறை இந்த நினைவேந்தல் ஆண்டிலாவது திருத்திக் கொள்ள வேண்டும்-சுமன்

அன்னையின் விடயத்தில் இந்தியா விட்ட தவறை இந்த நினைவேந்தல் ஆண்டிலாவது திருத்திக் கொள்ள வேண்டும்-சுமன்

 

அன்னையின் அறவழியை அன்று இந்தியா ஏற்க மறுத்தது. அதன் விளைவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை பாரிய யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. இந்தியா அன்று விட்ட தவறை இன்றாவது திருத்திக் கொள்ள வேண்டும் என ஜனநாயகப் போராளிகள் கட்சியின் உபதலைவர் என்.நகுலேஸ் தெரிவித்தார்.

அன்னை பூபதியின் 36வது நினைவேந்தல் தொடர்பில் வெளியிட்டுள்ள அறிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார். இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

அகிம்சை வழியில் ஈழத் தமிழ் மக்களுக்கு நியாமொன்றைப் பெற்றுக் கொடுக்க முடியும் என்ற நம்பிக்கையில் காந்தியின் வழியில் தமிழ் ஈழத்தில் இந்திய அமைதிப் படையின் பிரசன்னத்தை தவிர்த்து அவர்களை இந்தியா மீள அழைத்துக் கொள்ள வேண்டும் என்ற கோரிக்கையுடன் உண்ணாவிரதம் இருந்து உயிரைத் துறந்த அன்னை பூபதியின் 36வது ஆண்டு நினைவேந்தல் வடக்கு கிழக்கு தாயகமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வருகின்றது.

அன்னையின் அறவழியை அன்று இந்தியா ஏற்க மறுத்தது. அதன் விளைவே மூன்று தசாப்தங்களுக்கு மேலாக இலங்கை பாரிய யுத்தத்திற்கு முகங்கொடுத்தது. அன்று இந்தியா ஈழத்தமிழர்களுக்கு இழைத்தது மாபெரும் துரோகமாகும்.

அமைதி என்ற பெயரில் வருகை தந்து தமிழர்களை சொல்லொனாத் துயரில் ஆழ்த்திய அமைதிப்படை தமிழர் தாயகத்தில் இருந்து வெளியேற வேண்டும் என்பதுடன் கோரிக்கைகள் பலவற்றை முன்நிறுத்தி மார்ச் மாதம் 19ம் நாளன்று அன்னை பூபதியம்மா உண்ணா நோன்பினை ஆரம்பித்தார். ஆனால் அகிம்சையைப் போற்றும் இந்தியாவின் கண்களின் அன்னையின் அகிம்சைப் போராட்டம் கணக்கெடுக்கப்படவில்லை.

அன்னையின் அறவழி மட்டுமல்ல தியாக தீபம் திலீபன் உட்பட ஈழத்தமிழர்களின் அறவழி ஆயத ரீதியான எந்தப் போராட்டத்தின் போதும் இந்தியா பாராமுகமாகவே இருந்திருக்கின்றது என்பதே வரலாறுகள்.

இன்றுவரைக்கும் இருக்கும் இந்த வரலாற்றை இந்தியா மாற்ற முற்பட வேண்டும். இலங்கையில் ஈழத்தமிழர்கள் பலவாறான நெருக்கடிக்குள் சிக்குண்டு தவிக்கும் நிலைமை இந்தியாவிற்குத் தெரியாமல் இல்லை. அந்த நிலையில் இன்னும் இன்னும் ஆதிக்க சக்திகளுக்கு துணைபோகும் விதமாக இந்தியாவின் செயற்பாடுகள் இருப்பது மனவேதனையான விடயம். இருப்பினும் ஈழத்தமிழர்களோ, தமிழ் அரசியல்வாதிகளோ இன்னும் இந்தியாவின் மீது நம்பிக்கை கொண்டிருக்கின்றார்கள் என்ற நிலைமைகளிலும் மாற்றங்கள் இல்லை.

அகிம்சை வழியில் மாகாத்மா காந்தி இந்தியாவிற்குச் சுதந்திரம் வாங்கிக் கொடுத்தார். ஆனால், அதே அகிம்சை வழியிலான எமது தியாகிகளின் போராட்டங்கள் மதிக்கப்படாமை காரணமாகவே பாரிய ஆயுதப் போராட்டத்தினால் இலங்கை அவதியுற்றது.

இந்த நிலையில் இந்தியா அன்று விட்ட தவறை இன்றாவது திருத்திக் கொள்ள வேண்டும். ஈழத்தமிழர்கள் விடயத்தில் இந்தியாவிற்கு எப்போதெல்லாம் சந்தர்ப்பம் அமைகின்றதோ அப்போதெல்லாம் ஏமாற்றம் மாத்திரமே மிஞ்சுகின்றது. இந்த வருடத்திலாவது அந்த நிலைமையை மாற்றி ஈழத்தமிழர்களின் விடிவிற்காக தனது செயற்பாடுகளை முன்னெடுக்க வேண்டும் என்று தெரிவித்தார்.