Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதித் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல்: 12 ஆக அதிகரிப்பு

.

ஜனாதிபதி தேர்தலில் தோற்றவுள்ள வேட்பாளர்களின் எண்ணிக்கை 12 ஆக அதிகரித்துள்ளது.

ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க, எதிர்க்கட்சித் தலைவரும் ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவருமான சஜித் பிரேமதாச, தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அனுரகுமார திஸாநாயக்க , விஜயதாச ராஜபக்ச, பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா, தொழிலதிபர் திலித் ஜயவீர , தொழிலதிபர் தம்மிக்க பெரேரா , பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழுவின் முன்னாள் தலைவர் ஜனக ரத்நாயக்க, முன்னாள் அமைச்சர் ரொஷான் ரணசிங்க, மிஹிந்தலை ரஜமஹா விகாரையின் வலவாஹெங்குணவெவே தம்மரதன தேரர் ஆகியோர் போட்டியிடவுள்ளதாக சிங்கள ஊடகமான “லங்காதீப” செய்தி வெளியிட்டுள்ளது.

இது தவிர வடக்கில் உள்ள தமிழ் கட்சிகளின் பொது வேட்பாளரையும் முன்னிறுத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.

முன்னாள் ஜனாதிபதி ஜே.ஆர்.ஜயவர்தனவின் பேரனும் ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடுவார் என முதலில் அறிவிக்கப்பட்டது.

ஜனாதிபதி தேர்தல் நடத்தப்படும் திகதி அறிவிக்கப்பட்டுள்ளதால், வேட்பாளர் பட்டியல் மேலும் அதிகரிக்கலாம் என தேர்தல்கள் ஆணைக்குழு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, தற்போதைய அரசியல் சூழ்நிலைக்கு ஏற்ப இம்முறை ஜனாதிபதித் தேர்தலுக்கான மிகப்பெரிய வேட்பாளர் பட்டியல் முன்வைக்கப்படும் என அரசியல் விமர்சகர்கள் தெரிவிக்கின்றனர்.

இதனால் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தல் போட்டிமிக்கதாக அமையும் என அவர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.