ஜே.வி.பி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சில அரசியல் புரிதலற்ற தமிழ் இளைஞர்கள்! சிங்கள இனவாத பௌத்த இனவாத வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்.
.
ஜே.வி.பி காய்ச்சலால் பீடிக்கப்பட்ட சில தமிழ் இளைஞர்கள் அவர்களின் இனவாத வரலாற்றைக் கற்றுக்கொள்ள வேண்டும்
தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் சாடல்
------------------------------------------------------
கடந்த ஜனாதிபதித் தேர்தலில் ஐக்கிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க வெற்றிபெற்றிருந்த நிலையில் வடக்கில் உள்ள அரசியல் புரிதலற்ற இளைஞர்கள் பலருக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றியுள்ளமை குறித்து கவலை வெளியிட்டுள்ள தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்கள் ஜே.வி.பி யின் கடந்த கால கசப்பான இனவாத வரலாற்றைக் கற்றறிய வேண்டும் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளது.
தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள வாராந்த அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் தமிழ்த் தேசிய அவதானிப்பு மையம் வெளியிட்டுள்ள அறிக்கை வருமாறு,
2022 ஆம் ஆண்டு சிறீலங்காவின் ஜனாதிபதியாக இருந்த கோத்தபாய ராஜபக்சவின் தவறான கொள்கைகயைால் நாட்டில் ஏற்பட்ட பொருளாதார நெருக்கடியால் ஏற்பட்ட குழப்பங்களைத் தனக்குச் சாதகமாக்கிய ஜே.வி.பி நாட்டில் மாற்றத்தை ஏற்படுத்துகின்றோம் எனும் கோசத்தோடு தனது கட்சிப் பெயரை தேசிய மக்கள் சக்தி என உருமாற்றம் செய்து மக்கள் மத்தியில் கடுமையான பிரச்சாரங்களை மேற்கொண்டுவந்ததோடு 2024 செப்ரெம்பர் 21 ஆம் திகதி நடைபெற்ற ஜனாதிபதித் தேர்தலில் வெற்றிபெற்றது. இதன் மூலம் பாாரளுமன்றத்தில் வெறும் மூன்று உறுப்பினர்களை மட்டும் கொண்டிருந்த ஜே.வி.பி கட்சி மாபெரும் வெற்றி பெற்றது. தேர்தலில் வெற்றியடைந்து அனுரகுமார திசாயநாயக்க ஜனாதிபதியாகிய ஒரு சில தினங்களில் பாராளுமன்றம் கலைக்கப்பட்டு தேர்தலிற்கு திகதியிடப்பட்டது.
இந்நிலையில் தான் வடக்கு இளைஞர்கள் பலருக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றியுள்ளமை கண்டறியப்பட்டுள்ளது. தமிழ்த் தேசியப் பரப்பிலுள்ள அரசியல் கட்சிகள் யாவும் பிழையான வழி நோக்கிச் சென்று விட்டதாகவும் அனுரகுமார திசாநாயக்கவே தங்களது மீட்பர் என கூறும் அளவிற்கு 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்களின் மூளையில் ஜே.வி.பி காய்ச்சல் கடுமையாக தொற்றியிருக்கிறது.
இந்த ஜே.வி.பி காய்ச்சலில் இருந்து 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்கள் விடுபடவேண்டும் எனில் ஜே.வி.பியின் கடந்த கால வராலற்றைப் படிப்பதன் மூலமே அதிலிருந்து அவர்கள் விடுபட முடியும்.
2001 ஆம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகளுக்கும், சிறீலங்கா அரசாங்கத்தின் அப்போதய பிரதமர் ரணில் விக்கிரமசிங்கவிற்கும் இடையில் போர்நிறுத்த இணக்கப்பாடு ஏற்பட்டு 2002 ஆம் ஆண்டு போர்நிறுத்த உடன்படிக்கை கைச்சாத்திடப்பட்டது. அப்போது போர்நிறுத்தத்தையும் போர் நிறுத்த உடன்படிக்கையையும் கடுமையாக எதிர்த்த ஜே.வி.பி உடனடியாக போர்நிறுத்த ஒப்பந்தத்தை இரத்துச் செய்துவிட்டு போரைத் தொடங்கவேண்டும் என வலியுறுத்தி தொடர்ச்சியாக நான்கு நாட்கள் தென்னிலங்கையில் ஆர்ப்பாட்ட ஊர்வலங்களை நடாத்தியது. அந்த ஆர்ப்பாட்டங்களுக்கு வடக்கு இளைஞர்களுக்கு ஜே.வி.பி காய்ச்சல் தொற்றக் காரணமாக இருந்த அனுரகுமார திசாநாயக்கதான் தலைமை தாங்கியிருந்தார் என்பது 2000 ஆம் ஆண்டுகளுக்குப் பின் பிறந்த இளைஞர்களுக்குத் தெரிந்திருக்க வாய்ப்பில்லை.
தன்னை இடதுசாரித்துவக் கட்சியாகக் காட்டிக்கொண்ட ஜே.வி.பி 1971 ஆம் ஆண்டு கிளர்ச்சியின்போது ஆயுதங்களை மறைத்துவைக்கும் இடங்களாக பௌத்த பிக்குகளில் மடாலயங்களைத் தெரிவுசெய்ததோடு பௌத்த தேசியத்தை வளர்ப்பதன் மூலம் பௌத்த பீடங்களின் ஆதரவினைப் பெற்றுக்கொள்ள முனைந்தது. அத்தோடு சிறுபான்மை இனத்தவர்களுக்கு எதிராக இனவாத அரசியலை வளர்த்ததன் மூலம் சிங்கள இனவாத பௌத்த துறவிகளினது ஆதரவினையும் பெறவும் முனைந்தது.
சர்வதேச நிதி நிறுவனங்களையும், நோர்வேயின் மத்தியஸ்த பாங்கினையும் கடுமையாக விமர்சித்ததோடு சமாதானக் கொள்கைக்கு எதிராக யுத்தத்தினை நடாத்துவதற்கு தனது முழுமையான ஆதரவினை வழங்கியதோடு 2004 ஆம் ஆண்டு சுனாமியினால் ஏற்பட்ட தாக்கத்தினை வைத்தது அரசியல இலாபங்களைப் பெறமுனைந்தது. சுனாமி மீள் கட்டமைப்பிற்காக விடுதலைப் புலிகளுடன் இணைந்து இடைக்காலக் கட்டமைப்பு ஒன்றினை மேற்கொள்ள அப்போதைய பிரதமராக இருந்த ரணில் விக்கிரமசிங்க ஆர்வம் காட்டிய நிலையில் அதனைக் கடுமையாக எதிர்த்து அந்தக் கட்டமைப்பை இல்லாது ஒழித்தது.
கொழும்பில் 1983 ஜூலையில் தமிழர்களுக்கு எதிராக இடம்பெற்ற இனக்கலவரத்தினை அடுத்து அக்கலவரத்திற்கு ஜே.வி.பியினரே காரணமெனக் கூறி சிறீலங்கா அரசால் இரண்டாவது தடவையாக ஜே.வி.பி தடைசெய்யப்பட்டது. மக்கள் விடுதலை முன்னணியினுடைய அரசியற் கொள்கை ஏனைய இடதுசாரிக் கட்சிகளின் அரசியற் கொள்கைகளோடு ஒத்திருக்கவில்லை. அவர்கள் இனப்பிரச்சினைக்குத் தீர்வாக ஏனைய இடதுசாரிக் கட்சிகள் முன்வைத்த சமஷ்டிக் கொள்கையினை ஏற்றுக் கொள்ளவில்லை. சமஷ்டிக் கொள்கை நாட்டின் பிரிவினைக்கே வழிவகுக்கும் எனக் குறிப்பிட்டனர். தமது கொள்கையான சோசலிச அரசு என்பது நடைமுறைக்கு வரும் போது எல்லா இன மக்களும் சமத்துவமாக மதிக்கப்படுவதால் இனப்பிரச்சினை என்பதே இல்லாமல் போய்விடும் என இவர்கள் குறிப்பிட்டனர். இதன் அடிப்படையில் ஆட்சிக்குவந்த ஒவ்வொரு அரசாங்கத்தினாலும் முன்வைக்கப்பட்ட தீர்வு யோசனைகளை அவர்கள் எதிர்த்து வந்தனர்.
இலங்கையில் மிக நீண்டகாலமாக நிலவிவரும் இனப்பிரச்சினைக்கு ஒற்றையாட்சிக்குள்ளான தீர்வைக்கூட ஏற்க மாட்டோம் என்று மக்கள் விடுதலை முன்னணியின் பொதுச் செயலாளர் ரில்வின் சில்வா கூறியிருக்கிறார். தமிழ் மக்கள் இந்த நாட்டில் எதிர்கொள்ளும் ஒடுக்குமுறைப் பிரச்சினையை தன்னுடைய இனவாத ஆதிக்க சிந்தனையின் அடிப்படையில்தான் எல்லாக் கட்சிகளைப் போலவும் ஜே.வி.பி நோக்குகிறது என்பதையும் இன்னும் அந்த
நிலைப்பாட்டில்தான் அக்கட்சி இருக்கிறது என்பதையும் இந்தக் கருத்து
தெளிவுபடுத்துகிறது.
தமிழ் மக்களை இரண்டாம்தரப் பிரசைகளாக நடாத்தி அவர்களுக்கான சம உரிமையை மறுக்கும் சிறீலங்கா ஆட்சி முறையைப் பாதுகாக்கும் ஜே.வி.பி தமிழ் மக்களின் தீர்வு தொடர்பான சிறு முயற்சிகளையையே ஏதாவது காரணம் சொல்லி நிராகரிக்க முயல்வது புதிய விடயமல்ல.
“13ம் திருத்தச் சட்டத்தை அமுல்படுத்துமாறு இந்தியா கோரி வருவது தமிழ் மக்களின் நலனை கருத்திற்கொண்டல்ல. இந்தியாவின் பொருளாதார நலன்களை உறுதி செய்து கொள்ளும் நோக்கிலாகும் எனக் கூறிய மக்கள் விடுதலை முன்னணி (ஜே.வி.பி) 2006 ஆம் ஆண்டில் அந்தச் சட்டத்தையும் அதன்பால் இணைக்கப்பட்ட வடகிழக்கையும்
நீதிமன்றத்தை நாடி பிரித்தது.
அண்மைய காலத்தில் மக்கள் விடுதலை முன்னணி தமிழ் மக்களின் பிரச்சினை, தீர்வு உள்ளிட்ட விடயங்களில் மாறுபட்ட கருத்துக்களை தெரிவித்து வருவது அக்கட்சி தமது அரசியல் நோக்கங்களுக்காக மாத்திரமே தமிழ் மக்களின் பிரச்சினையை அணுகுகிறது என்பதையும் தொடர்ந்தும் அக்கட்சி இனவாத அடிப்படையில் செயற்படுகிறது என்பதையும் புலப்படுத்துகிறது.
“தமிழ் மக்களின் பிரச்சினைகளுக்கு தீர்வு வழங்காவிட்டால