Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யார் ஜனாதிபதியானாலும் இழந்த எம் உறவுகளுக்கான நீதி கிடைக்காது: சர்வதேசத்திடமிருந்தும் சமிக்ஞைகள் இல்லை

.

காணாமல் ஆக்கப்பட்ட எமது உறவுகளைத் தேடி நாங்கள் கடந்த 15 வருடங்களாக வீதியில் இறங்கி போராடி வருகின்ற நிலையில் இதுவரை எந்த ஜனாதிபதியும் எங்களுக்கு தீர்வை பெற்றுத் தரவில்லை.

எனவே இம்முறை இடம்பெற உள்ள ஜனாதிபதி தேர்தலில் யார் ஜனாதிபதியாக வந்தாலும் எமக்கு எந்தவித பலனும் இல்லை என மன்னார் மாவட்ட வலிந்து காணாமல் ஆக்கப்பட்ட உறவுகளை தேடும் குடும்பங்களின் சங்க தலைவி மனுவல் உதயச்சந்திரா தெரிவித்தார்.

மன்னாரில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் கருத்து தெரிவிக்கையிலேயே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

“சர்வதேச வலிந்து காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தையாட்டி எதிர்வரும் வெள்ளிக்கிழமை 30 ஆம் திகதி வடக்கு, கிழக்கில் 8 மாவட்டங்களில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் இணைந்து இரு மாவட்டங்களில் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம்.

வடமகாணத்தில் உள்ள 5 மாவட்டங்களும் இணைந்து யாழ். மாவட்டத்திலும், கிழக்கு மாகாணத்தில் உள்ள 3 மாவட்டங்களும் இணைந்து திருகோணமலை மாவட்டத்திலும் போராட்டத்தை முன்னெடுக்க உள்ளோம். இதற்கு வடக்கு கிழக்கில் உள்ள காணாமல் ஆக்கப்பட்டவர்களின் உறவுகள் பூரண ஆதரவை வழங்க வேண்டும்.

நாங்கள் கடந்த 15 வருடங்களுக்கு மேலாக வீதியில் இருந்து போராடி வருகின்றோம். எனினும் எங்களுக்கு இதுவரை எவ்வித பதிலும் கிடைக்கவில்லை. இலங்கை அரசாங்கத்திடம் இருந்தும் சரி சர்வதேசத்திடம் இருந்தும் சரி எவ்வித சமிஞ்ஞைகளும் கிடைக்கவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் எவர் ஜனாதிபதியாக வந்தாலும் எங்களுக்கு எந்த பலனும் இல்லை. நாங்கள் எவரையும் ஜனாதிபதியாக ஆதரிக்கவில்லை. எப்படியாக இருந்தாலும் ஜனாதிபதியாக சிங்கள ஆட்சியாளர்கள் வரப் போகின்றனர். அவர்கள் ஆட்சிக்கு வந்தாலும் காணாமல் ஆக்கப்பட்டவர்களுக்கு உரிய தீர்வு கிடைக்கும் என நாங்கள் நம்பவில்லை. இதனாலேயே நாங்கள் சர்வதேசத்தை நம்பி நிற்கின்றோம்.

யார் ஜனாதிபதியாக வந்தாலும் எமக்கு கவலை இல்லை. எவரையும் நாங்கள் ஜனாதிபதியாக ஆதரிக்கவில்லை. எவராலும் காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்கு எந்த பலனும் இல்லை. காணாமல் ஆக்கப்பட்ட எம் உறவுகளுக்காக முன்னெடுக்கும் போராட்டங்களில் ஒரு சில அரசியல் பிரதிநிதிகள் எமக்கு ஆதரவு தெரிவித்தனர்.

ஏனையோர் எவ்வித ஆதரவும் வழங்கவில்லை. எனவே எவர் ஜனாதிபதியாக வந்தாலும் பரவாயில்லை. வருகின்றவர்கள் எமக்கு நீதியை பெற்றுத் தருவார்கள் என்றால் நாங்கள் அவர்களுடன் பேச முடியும்” எனத் தெரிவித்தார்.