உக்ரைன் மீதான ரஸ்யாவின் போர் குறித்து ஐநாவில் இரண்டு தீர்மானங்கள் - அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவு.
.

உக்ரைன் மீது ரஸ்யா போரை ஆரம்பித்து மூன்று வருடங்களாவதை குறிக்கும் விதத்தில் ஐக்கிய நாடுகள் சபை தீர்மானம் நிறைவேற்றியுள்ள அதேவேளை இந்த தீர்மானங்கள் மீதான வாக்கெடுப்பின் போது அமெரிக்கா ரஸ்யாவிற்கு ஆதரவாக வாக்களித்துள்ளது.
உக்ரைனின் ஆள்புல ஒருமைப்பாட்டை ரஸ்யா மீறியுள்ளதை கண்டிக்கும் விதத்தில் ஐக்கியநாடுகள் பொதுச்சபை கொண்டுவந்த தீர்மானத்திற்கு ரஸ்யாவுடன் அமெரிக்காவும் தனது கண்டனத்தை வெளியிட்டுள்ளது.இந்த தீர்மானத்தை பொதுச்சபை நிறைவேற்றியுள்ளது.
இதன் பின்னர் உக்ரைன் மோதலிற்கு முடிவை காணவேண்டும் என தெரிவிக்கும் ஆனால் ரஸ்யாவை கண்டிக்காத ஐக்கிய நாடுகள் பாதுகாப்பு சபையின் தீர்மானத்திற்கு ரஸ்யாவும் அமெரிக்காவும் ஆதரவளித்துள்ளன.
பாதுகாப்பு சபையின் தீர்மானம் மீதான வாக்கெடுப்பை அமெரிக்காவின் இரண்டுநெருங்கிய சகாக்களான பிரிட்டனும் பிரான்சும் புறக்கணித்தமை குறிப்பிடத்தக்கது.
உக்ரேனுக்கு ஆதரவான ஐ.நா. தீர்மானம்; ரஷ்யாவின் பக்கம் நின்ற அமெரிக்கா!
உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான வாக்கெடுப்பில் அமெரிக்கா ரஷ்யாவின் பக்கம் நின்றது.
இது போரில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மாற்றியதை எடுத்துக் காட்டுவதாக அமைந்ததுடன், அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளுடனா கொள்கைக்கு முரணாக செயற்பட்டது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் திங்கட்கிழமை (24) ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள், போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தன.
உக்ரேன் மீதான ரஷ்ய படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவைக் குறிக்கும் வகையில் ஐக்கிய நாடுகள் சபையின் தீர்மானங்கள் தொடர்பான வாக்கெடுப்பில் அமெரிக்கா ரஷ்யாவின் பக்கம் நின்றது.
இது போரில் டொனால்ட் ட்ரம்ப் நிர்வாகத்தின் நிலைப்பாட்டை மாற்றியதை எடுத்துக் காட்டுவதாக அமைந்ததுடன், அமெரிக்கா தனது ஐரோப்பிய நட்பு நாடுகளுடனா கொள்கைக்கு முரணாக செயற்பட்டது.
உக்ரேன் மீதான ரஷ்யாவின் ஆக்கிரமிப்பின் மூன்றாம் ஆண்டு நினைவு நாளில் திங்கட்கிழமை (24) ஐ.நா. பொதுச் சபையில் கொண்டு வரப்பட்ட தீர்மானங்கள், போரை முடிவுக்கு கொண்டு வர முயற்சித்தன.
ரஷ்யாவுடன் நெருக்கமாக இருக்கும் இந்தியாவும், ரஷ்யாவின் நெருங்கிய நட்பு நாடான சீனாவும், ஐ.நாவின் உக்ரேன் போர் தீர்மானங்களுக்கு வாக்களிப்பதில் இருந்து விலகின.
அதேநேரம், ரஷ்யாவின் முழு அளவிலான படையெடுப்பின் மூன்றாம் ஆண்டு நிறைவில் உக்ரேனுக்கு கிடைத்த வெற்றியில், ஐ.நா பொதுச் சபை திங்களன்று போரை நிறுத்த வலியுறுத்தும் அமெரிக்க ஆதரவு தீர்மானத்தை அங்கீகரிக்க மறுத்தது.
மொஸ்கோவின் ஆக்கிரமிப்பைக் குறிப்பிடத் தவறியதால், சபை உறுப்பினர்கள் வொஷிங்டனின் தீர்மானத்தை ஏற்க மறுத்துவிட்டனர்.
அதற்கு பதிலாக, அவர்கள் ஐரோப்பிய ஆதரவுடன் கூடிய தீர்மானத்திற்கு ஒப்புதல் அளித்தனர்.
இது ரஷ்யா உடனடியாக உக்ரேனிய பிரதேசங்களில் இருந்து தனது படைகளை திரும்பப் பெற வேண்டும் என்று கோருகிறது.
இதை அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் நிர்வாகம் எதிர்த்தது.
வொஷிங்டன் அதன் முன்மொழிவுக்கு ஆதரவாக தங்கள் தீர்மானத்தை திரும்பப் பெறுமாறு உக்ரேன் மீது அழுத்தம் கொடுக்க முயன்றது.
மூன்று ஐரோப்பிய முன்மொழியப்பட்ட திருத்தங்களுடன் தீர்மானத்திற்கு ஒப்புதல் அளிப்பதற்கு முன், உக்ரேன் மறுத்துவிட்டது.
193 உறுப்பினர்களைக் கொண்ட உலக அமைப்பில் ட்ரம்ப் நிர்வாகத்திற்கு பின்னடைவாக 93 வாக்குகளால் திருத்தப்பட்ட தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
உக்ரேன் மற்றும் ஐரோப்பிய நாடுகளால் உருவாக்கப்பட்ட ஒரு தனித் தீர்மானமும் ஆதரவாக 93 வாக்குகளால் நிறைவேற்றப்பட்டது.
அமெரிக்கா, ரஷ்யா, இஸ்ரேல் மற்றும் வடகொரியா ஆகிய நாடுகளுடன் சேர்ந்து வாக்களிக்கவில்லை.
தீர்மானங்கள் சர்வதேச அளவில் உக்ரேனுக்கான ஆதரவு குறைந்து வருவதைக் குறிக்கிறது.
முன்னதாக ஐ.நா. பொதுச் சபை உக்ரேனிய தீர்மானங்களை அதிக பெரும்பான்மையுடன் நிறைவேற்றியது, சில சமயங்களில் 140 க்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் ரஷ்யாவைக் கண்டிக்கும் போது அவற்றை ஏற்றுக்கொண்டனர்.
இந்த தீர்மானங்கள் சட்டப்பூர்வமாக பிணைக்கப்படவில்லை, ஆனால் உலகக் தலைவர்களின் தீர்மானமாக அடையாளமாக பார்க்கப்படுகின்றன.
ஆனால் அமெரிக்கா, ரஷ்யா, சீனா, பிரிட்டன் மற்றும் பிரான்ஸ் ஆகிய நாடுகளுக்கு வீட்டோ அதிகாரம் உள்ளது.