Breaking News
ஜே.வி.பியின் கூட்டத்தில் கலந்து கொண்டோர் மீது தாக்குதல்; நால்வர் வைத்தியசாலையில்
.
தேசிய மக்கள் சக்தியின் கூட்டத்தில் கலந்துக்கொண்டு மீண்டும் திரும்பிய பேருந்து மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதலில் நால்வர் காயமடைந்துள்ளனர்.
மொனராகலை பிரதேசத்தில் இன்று வெள்ளிக்கிழமை காலை தேசிய மக்கள் சக்தியின் கட்சி கூட்டம் இடம்பெற்றது.
அந்தக் கட்சியின் ஜனாதிபதி வேட்பாளர் அனுரகுமார திசாநாயக்க தலைமையில் மொனராகலை உள்ளூராட்சி மன்ற மைதானத்தில் இடம்பெற்ற மக்கள் சந்திப்பில் கலந்து கொண்டு திரும்பிய வேளை மக்கள் மீது தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இதன்போது காயமடைந்தவர்கள் சிகிச்சைகளுக்காக புத்தல பிரதேச வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் சம்பவம் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்துள்ளனர்.