Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

கெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை! - யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!

யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் கெரோயின் போதைப்பொருள் வைத்திருந்த பெண்!

கெரோயின் போதைப்பொருளுடன் கைதான பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறை - யாழ் மேல் நீதிமன்றம் அதிரடி!
யாழ்ப்பாணம், பொம்மைவெளி பகுதியில் கடந்த 2020 ஜூன் மாதம் 1.475 கிராம் கெரோயின் போதைப்பொருள் உடைமையில் வைத்திருந்த குற்றச்சாட்டு சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பெண்ணுக்கு 7 வருட கடூழிய சிறைத் தண்டனை மற்றும் 1 இலட்சம் ரூபா தண்டப்பணம் விதித்து யாழ்ப்பாண மேல் நீதிமன்ற நீதிபதி  A.G.அலெக்ஸ்ராஜா அவர்கள் இன்று (21) அன்று தீர்ப்பளித்தார்.

வழக்கு தொடுநர் தரப்பில் சட்டமா அதிபர் சார்பில் ஆஜராகி இருந்த அரச சட்டவாதி ஆறுமுகம் தனுஷன் அவர்கள், அதிகரித்து வரும் போதை பொருள் தொடர்பான குற்றங்கள் மற்றும் உயர் நீதிமன்ற வழக்குகளை மேற்கோள்காட்டி போதை பொருள் குற்றவாளிகளுக்கு அதியுச்ச தண்டனை வழங்க வேண்டும் என சமர்ப்பனங்களை மேற்கொண்டு இருந்த நிலையில் இந்த தண்டனை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

மேலும் தண்டப்பணம் செலுத்த தவறும் பட்சத்தில் மேலும் 12 மாத கால சாதாரண சிறைத்தண்டனை அனுபவிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டார். குற்றவாளிகள் தண்டிக்கப்பட பல வருடங்கள் கடக்கும் இந்த காலத்தில் மிக குறுகிய காலத்தில் யாழ் நீதிமன்றில் வழக்குகள் முடிக்கப்பட்டு குற்றவாளிகள் மீண்டும் குற்றம் செய்ய நினைக்க கூட பயப்படும் தண்டனைகளை யாழ் நீதிமன்றம் விதித்து வருகின்றது.

போதை பொருள் குற்றச்சாட்டுகளை கட்டுப்படுத்தும் இந்த நடவடிக்கைகள் வரவேற்கப்பட கூடியது. தண்டனைகள் அதிகரிக்கப்படின் குற்றங்கள் குறைக்கப்படும் என்ற நிலையில் இனி போதைபொருள் குற்றங்களுக்கு இலகு தண்டனைகள் நினைத்துக்கூட பார்க்க முடியாது என்று நிலை உருவாகி உள்ளமை யாழ் பிராந்திய மக்களால் வரவேற்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது.  கடந்த வாரமும் 1.4g போதைப்பொருளை உடமையில் வைத்திருந்த நபருக்கு 7 வருட கடூழிய சிறை தண்டனை விதிக்கப்பட்டது குறிப்பிடத்தக்து.