Breaking News
அனுரவின் தேர்தல் அலுவலகம் தீ வைப்பு: முறைப்பாடுகள் ஆயிரத்தை கடந்தது
.
ஜனாதிபதித் தேர்தல் பிரசார நடவடிக்கைகளுக்காக மீரிகம பகுதியில் அமைக்கப்பட்டிருந்த தேசிய மக்கள் சக்தியின் தேர்தல் அலுவலகம் மாற்று கட்சியினரால் தீ வைத்து சேதப்படுத்தப்பட்டுள்ளது.
நேற்று புதன்கிழமை மாற்றுக் கட்சியை சேர்ந்த நபர் ஒருவர் இந்த அலுவலகத்தை சேதப்படுத்தியுள்ளதாக இந்த பிரதேச மக்கள் தெரிவித்துள்ளனர்.
மீரிகம பொலிஸில் அளிக்கப்பட்டுள்ள முறைப்பாட்டின் பிரகாரம் சந்தேக நபரை தேடும் நடவடிக்கையை பொலிஸார் ஆரம்பித்துள்ளனர்.
ஜனாதிபதித் தேர்தலுக்கு இன்னமும் 23 நாட்கள் மாத்திரமே உள்ள நிலையில் நாட்டில் தேர்தல் வன்முறைகளும் அதிகரித்து வருகின்றன.
இதுவரை 1155 தேர்தல் முறைப்பாடுகள் பதிவாகியுள்ளதாக தேர்தல்கள் ஆணைக்குழு இன்று வியாழக்கிழமை வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளது.