Breaking News
பரந்தனில் இராணுவத்தினர் கையகப்படுத்திய 15 ஏக்கர் காணி விடுவிப்பு!
.36

கிளிநொச்சி – பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் இராணுவத்தினர் வசமிருந்த 15ஏக்கர் காணி இராணுவத்தினரால் பிரதேச செயலாளரிடம் கையளிக்கப்பட்டது.
பரந்தன் இரசாயன தொழிற்ச்சாலையின் 15 ஏக்கர் காணி தொடர்ந்தும் இராணுவத்தினர் வசமிருந்த நிலையில் நேற்றையதினம் (03.04.25) குறித்த காணி 553வது படைப்பிரிவின் நிர்வாக அதிகாரி கண்டாவளை பிரதேச செயலாளர் த.பிருந்தாகரனிடம் கையளித்தார்.
யுத்தம் காரணமாக கைவிடப்பட்ட பரந்தன் இரசாயன தொழிற்சாலைக் காணி யுத்தம் நிறைவடைந்த பின்னரும் இராணுவத்தினரின் கட்டுப் பாட்டில் இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது