Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான பிரான்ஸ் நாட்டின் அமைச்சின் பொதுச் செயலாளர் மற்றும் பிரதமருக்கிடையிலான சந்திப்பு.

.

இலங்கைப் பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய அவர்கள் பிரான்சின் ஐரோப்பா மற்றும் வெளியுறவுகள் தொடர்பான அமைச்சின் பொதுச் செயலாளர் திருமதி Anne-Marie Descotes அவர்களை சந்தித்தார்.  டிசம்பர் 11ம் திகதி கொழும்பு பிரதமர் அலுவலகத்தில் இடம்பெற்ற இச்சந்திப்பின்போது பிரான்ஸ் மற்றும் இலங்கைக்கு இடையிலான இருதரப்பு தொடர்புகளை வலுப்படுத்தல் பற்றி கலந்துரையாடப்பட்டது.
இரு நாடுகளுக்கிடையிலான தொடர்புகளை பலப்படுத்துவதற்காக பிரான்ஸ் மேற்கொள்ளும் அர்ப்பணிப்புகள் பற்றி பொதுச்செயலாளர் Descotes அவர்கள் இங்கு விளக்கினார்.  அத்துடன் சமுத்திரவியல் ஆய்வு தொடர்பான பிராந்திய நிலைய (RCMS) ஒப்பந்தத்தின் முக்கியத்துவம் பற்றியும் மேலும் பல்வேறு துறைகளில் ஒன்றிணைந்து செயற்படக்கூடிய வாய்ப்புகள் தொடர்பிலும் அவதானம் செலுத்தப்பட்டது.  பிரான்ஸ் நாட்டுடனான தொடர்புகளை வலுவாக முன்னெடுத்துச்செல்ல இலங்கை கொண்டுள்ள ஆர்வத்தை வெளிப்படுத்திய பிரதமர், கல்வி, விசேடமாக கல்வியின் தரம், தொழிற்கல்வியை வலுவூட்டல், காலநிலை மாற்றங்கள், சூழல் பாதுகாப்பு மற்றும் சமுத்திரவியல் ஒத்துழைப்பு உள்ளிட்ட பல துறைகள் தொடர்பிலும் ஒன்றிணைந்து செயற்படல் குறித்து பொதுச்செயலாளருடன் கலந்துரையாடப்பட்டது.
 
இச்சந்திப்பின்போது இருநாடுகளையும் சேர்ந்த உயர் அதிகாரிகளும் குறிப்பாக பிரதமரின் செயலாளர் திரு பிரதீப் ஹபுதன்த்ரி, மேலதிக செயலாளர் (அபிவிருத்தி ) திரு மஹிந்த குணரத்ன, மற்றும் வெளிநாட்டு அலுவல்கள் அமைச்சின் ஐரோப்பிய மற்றும் வட அமெரிக்க பிரிவிற்கான துணைப் பணிப்பாளர் A.T.U  அதுரலிய ஆகியோர் உள்ளிட்ட இலங்கை பிரதிநிதிகளும் சமூகமளித்திருந்தனர்.