Breaking News
தமிழ் பொது வேட்பாளர்: மட்டக்களப்பு இளைஞர்களுடன் சந்திப்பு
.
எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலில் தமிழ் பொது வேட்பாளரை நிறுத்தும் நோக்குதல் பல்வேறு கலந்துரையாடல்களில் ஈடுபட்டுவரும் தமிழ் மக்கள் பொதுச் சபையின் உறுப்பினர் இன்று வியாழக்கிழமை மட்டக்களப்பு திராய்மடு கிராம அபிவிருத்தி சங்கம் மாதர் சங்கம் மற்றும் விளையாட்டுக் கழக இளைஞர்களுடன் கோள்ஸ்ரார் விளையாட்டு கழக மைதானத்தில் கலந்துரையடாலில் ஈடுபட்டனர்.
அருட்தந்தை ஜீவராஜ், சபா.சிவயோகநாதன், திருமதி.வதணி, திருமதி.ராகினி, செல்வகுமார் ஆகியோர் தமிழ் மக்கள் பொதுச் சபை சார்பாக கலந்துரையாடலில் கலந்து கொண்டனர்.
இதன்போது எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் சார்பாக நிறுத்தப்படவுள்ள தமிழ்ப் பொதுவேட்பாளர் தொடர்பான கருத்து பரிமாற்றங்கள் நடைபெற்றது.