பு லி க ள் மீது மேலும் ஐந்தாண்டுகளுக்கு தடையை நீடித்துள்ளது நடுவன் மோடி அரசு.
, சவுக்கு சங்கர் புலிகளுக்கு எதிராக பேசினார். அதனால் தான் இப்படி தடை
பு லி க ள் மீது மேலும் ஐந்தாண்டுகளுக்கு தடையை நீடித்துள்ளது நடுவன் மோடி அரசு.
அது பற்றி முன்பே பதிவு போட்டிருந்தேன். உடனே, சவுக்கு சங்கர் புலிகளுக்கு எதிராக பேசினார். அதனால் தான் இப்படி தடை செய்து விட்டார்கள் பார்த்தீர்களா என்று சில Intelectual கள் எழுதுவதை பார்க்கும் போது கொடுமைடா சாமி என்றுள்ளது. சவுக்கு சங்கர் மீது எனக்கும் விமர்சனம் உள்ளது. அது எது, எதில், எதுவரை என்ற தெளிவும் உள்ளது. எல்லாவற்றிலேயும் சவுக்கை முட்டிக்கொண்டிருக்க முடியாது - கூடாது. சவுக்கு பேசியோ, அல்லது
ANI மணியும் - சவுக்கும் உட்கார்ந்து பு லி க ள் பற்றி எதிராக பேசியதாலயோ தடை போடுவதில்லை. அதற்காக அவர்கள் விவாதித்ததை சரி எனக் கொள்ள முடியாது. அப்போதே சவுக்கு சங்கரை 2 முறை விவாதத்திற்கு அழைத்தேன். நேரமில்லை என்று எஸ்கேப் ஆனபடி இருந்தார். அடுத்து மாமன் ANI மணி அழைத்தேன். அவர் சவுக்கு போன்ற Intelectual களோடு மட்டுமே விவாதிப்பார்_ பேசுவார். போகட்டும்.இன்று, முதல்வர் ஸ்டாலின் அவர்களுக்கு சிறப்பு பாதுகாப்பு பிரிவு ஏன் இருக்கின்றது என்பதை, 'சவுக்கை முட்டும்' நபர்கள் யோசிக்க வேண்டும். அவர் எதிர் கட்சியாக இருந்த போதும் இந்த பாதுகாப்பு இருந்தது . அதற்கு காரணம், 'பு லி க ளா ல் ஆபத்து என்று சங்கு ஊதிக் கொண்டிருப்பது தான். ஒன்றிய அரசிடம் டி.ஆர்.பாலு பேசிய பதிவுகளே சாட்சி. கலைஞர் காலத்தில் இருந்தே, 'அவர்களால் ஆபத்து' என்று தான் நாடகமாடி உயர் பாதுகாப்பு பெற்று வந்தார்கள். ஜெவுக்கும் அது பொருந்தும் இவர்களின் அரசியல் பிழைப்புக்கு இப்படி தடை நீடிப்பு தேவைப்படுகிறது. அதனாலேயே இவர்கள் ஒன்றிய அரசிடம் தடையை நீக்கு என அழுத்தம் கொடுக்காமல் - போராடாமல் பிழைப்பு நடத்துகிறார்கள். ஒன்றிய அரசுக்கோ இப்படிப்பட்ட திராவிட தலைமைகளே நமக்கு தேவை என அரவணைத்து 'நட்பு நாடு இலங்கையின் மனசு நோகாமல்' நடந்து வருகிறது.
இதைத் தான் ஆசான் பெ.மணியரசன், 'இந்திய அரசு ஒருபோதும் ஈழத்தை பெற்றுத் தர உதவாது' என தெளிவாக எடுத்துரைத்து வருகின்றார். வலுவான அரசியல் அழுத்தம் என்பதில்லாது - வலுவான போராட்டம் இல்லாது அது சாத்தியம் இல்லை. அப்படியான அழுத்தம் - போராட்டம் சாத்தியப்படும் என்றால் தழிழர் அரசியல் முன்னெடுத்து வர வேண்டும். அந்த நகர்வில் 7 சதவீதம் தாண்டியுள்ளது நாம் தமிழர் கட்சி - சீமான் முயற்சி. இன்றும் 30 சதம் முன்னேற வேண்டும். இந்த ஆரிய-திராவிட அல்லது ஒன்றிய-திராவிட அரசின் சதியெல்லாம் புரியாது, சும்மா சவுக்கு சங்கரையே சுத்திகிட்டு, அவரால தான் இது எல்லாம் கெட்டதுனு யாரையோ புனிதராக்கும் வேலை சிலர் செய்வது எதற்கு? என்று தான் புரியவில்லை.