Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

பிரான்ஸை உலுக்கத் தயாராகும் தொடர் போராட்டங்கள்!

பிரான்ஸ் அடுத்த சில நாட்களுக்குப் பெரும் கொந்தளிப்பான சூழலைச் சந்திக்கவிருக்கிறது.

விவசாயிகள் முதல் தொழிலதிபர்கள்வரை: பிரான்ஸை உலுக்கத் தயாராகும் தொடர் போராட்டங்கள்!
பிரான்ஸ் அடுத்த சில நாட்களுக்குப் பெரும் கொந்தளிப்பான சூழலைச் சந்திக்கவிருக்கிறது. விவசாய சங்கங்கள், தொழிற்சங்கங்கள், ஓட்டுநர் பயிற்சிப் பள்ளிகள், ஏன், பெரும் நிறுவனங்களின் முதலாளிகள்வரை சமூகத்தின் பல்வேறு தரப்பினரும் அரசின்  கொள்கைகளுக்கு எதிராக அடுத்தடுத்து மாபெரும் போராட்டங்களை அறிவித்துள்ளனர். இதனால், பிரான்ஸ் முழுவதும் ஸ்தம்பிக்குமோ என்ற கேள்வி எழுந்துள்ளது.

பாரிஸை ஸ்தம்பிக்க வைக்கும் ஓட்டுநர் பள்ளிகள் (செப்டம்பர் 29)
இன்று திங்கட்கிழமை, செப்டம்பர் 29 அன்று, தலைநகர் பாரிஸ் ஒரு பெரும்  போராட்டத்தைச் சந்திக்க உள்ளது. ஓட்டுநர் உரிமம் வழங்குவதில் ஏற்படும் தாமதம் மற்றும் அதீத செலவுகளுக்கு அரசாங்கமே காரணம் எனக் குற்றம்சாட்டி, ஓட்டுநர் பயிற்சிப் பள்ளி உரிமையாளர்களும், ஓட்டுநர் தேர்வு ஆய்வாளர்களும் பாரிஸை முற்றுகையிட்டு ஸ்தம்பிக்க வைக்கப் போவதாக அறிவித்துள்ளனர். "அரசாங்கம் எங்களைப் பலிகடா ஆக்குவதை நிறுத்த வேண்டும். வெறும் 150 புதிய ஆய்வாளர்களை நியமித்தால் இந்தப் பிரச்சினை தீர்ந்துவிடும்," எனத் தொழிற்சங்க வட்டாரங்கள் கொதிக்கின்றன.

அனைத்துத் தொழிற்சங்கங்களின் மாபெரும் வேலைநிறுத்தம் (அக்டோபர் 2)
அடுத்த கட்டமாக, அக்டோபர் 2, வியாழக்கிழமை அன்று, பிரான்சின் முக்கிய தொழிற்சங்கங்கள் அனைத்தும் ஒன்றிணைந்து, அதிபர் இம்மானுவேல் மக்ரோனின் "சிக்கனக் கொள்கைகளுக்கு" எதிராக மாபெரும் தேசிய வேலைநிறுத்தத்திற்கு அழைப்பு விடுத்துள்ளன. கடந்த செப்டம்பர் 18 அன்று நடந்த முதல் கட்டப் போராட்டத்தில் பத்து லட்சத்திற்கும் அதிகமானோர் கலந்துகொண்ட நிலையில், இந்த இரண்டாம் கட்டப் போராட்டம் இன்னும் பெரிய தாக்கத்தை ஏற்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. "சூடு ஆறுவதற்குள் இரும்பை அடிக்க வேண்டும், அக்டோபர் 2 அன்று பெருந்திரளாகக் கூடுவோம்" என CGT தொழிற்சங்கத் தலைவர் சோஃபி பினெட் அறைகூவல் விடுத்துள்ளார்.

முதன்முறையாகக் களத்தில் குதிக்கும் தொழிலதிபர்கள்! (அக்டோபர் 13)
இந்தத் தொடர் போராட்டங்களில் மிகவும் ஆச்சரியமான திருப்பமாக, பிரான்சின் முதலாளிகள் சம்மேளமான Medef, அக்டோபர் 13 அன்று ஒரு "மாபெரும் தொழிலதிபர்கள் கூட்டத்திற்கு" ஏற்பாடு செய்துள்ளது. பெரும் நிறுவனங்கள் மற்றும் செல்வந்தர்கள் மீது புதிய வரிகளை விதிக்கும் அரசின் திட்டங்களுக்கு எதிராகத் தொழிலதிபர்களின் கோபத்தை வெளிப்படுத்தவே இந்தப் போராட்டம் என அதன் தலைவர் பேட்ரிக் மார்ட்டின் அறிவித்துள்ளார்.

மீண்டும் விவசாயிகளின் குரல் (அக்டோபர் 14)
இறுதியாக, Confédération paysanne என்ற மற்றொரு விவசாய சங்கம், விவசாயப் பொருட்களின் சந்தை ஊகங்களுக்கு எதிராகப் போராடிய இரண்டு விவசாய சங்கப் பிரதிநிதிகளுக்கு ஆதரவாக, அக்டோபர் 14 அன்று பாரிஸில் ஒரு போராட்டத்தை நடத்த திட்டமிட்டுள்ளது.
விவசாயிகள், தொழிலாளர்கள், ஆசிரியர்கள், முதலாளிகள் என அனைத்துத் தரப்பினரும் ஒரே நேரத்தில் அரசின் மீது அதிருப்தியில் இருப்பது, பிரான்சின் புதிய பிரதமருக்குப் பெரும் சவாலாக அமைந்துள்ளது. அடுத்த சில வாரங்கள் பிரான்ஸ் அரசியலில் மிகவும் வெப்பமானதாக இருக்கும் என்பதில் சந்தேகமில்லை.