Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

புதின் வட கொரிய அதிபருக்கு பரிசளித்த காரில் தென் கொரிய பாகங்கள்..வெடித்தது சர்ச்சை

24 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக ரஷிய அதிபர் புதின் வட கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

“ரஷியாவுக்கும் வட கொரியாவுக்கும் இடையிலான உறவு நாளுக்குநாள் வலுவடைந்துகொண்டே வருகிறது.

மேற்கு நாடுகளுக்கு பரம எதிரிகளாக விளங்கும் ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மற்றும் வட கொரிய அதிபர் கிம் ஜாங் உன் தங்களது நாடுகளுக்கிடையில் பரஸ்பர உறவை நிலைநாட்ட முயற்சித்து வருகின்றனர். உக்ரைன் போரில் ரஷியாவுக்கு ஆதராவாக ஆயுதங்களை அனுப்பும் அளவுக்கு இந்த புதிய உறவு வலுப்பெற்றுள்ளது.

24 ஆண்டுகள் கழித்து கடந்த ஜூன் 19 ஆம் தேதி இரண்டாவது முறையாக ரஷிய அதிபர் புதின் வட கொரியாவுக்கு அரசுமுறைப் பயணம் மேற்கொண்டார்.

வட கொரிய தலைங்கர் பியங்காங்கில் கிம் ஜாங் உன் – ஐ சந்தித்து அவருக்கு ரஷிய தயாரிப்பான அவுரஸ் லிமவுசைன் [Aurus limousine] என்ற சொகுசு காரை பரிசளித்தார் புதின்.

மேலும் இருவரும் அந்த காரில் சிறிது தூரம் பயணம் மேற்கொண்டனர். கிம் ஜாங் உன் அருகில் அமர்ந்திருக்க புதின் சொகுசு காரை ஓட்டிக்காட்டினார்.

பின்னர் கிம் ஜாங் உன் காரை ஆர்வமாக ஓட்டிப்பார்த்தார். இந்த வீடியோ இணையதளத்தில் தீயாக பரவி வருகிறது.

இந்நிலையில் புதின் பரிசளித்த அவுரஸ் லிமவுசைன் கார் குறித்த சர்ச்சைக்குரிய உண்மை ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.

அதாவது, அவுரஸ் லிமவுசைன் கார்களை அவுரஸ் மோட்டார்ஸ் என்ற ரஷிய நிறுவனம் தயாரித்து வரும் நிலையில் கார் தயாரிப்பிற்கான உதிரிபாகங்களை அந்நிறுவனம் தென் கொரியா, சீனா, இந்தியா, துருக்கி, இத்தாலி என பல்வேறு நாடுகளில் இருந்து இறக்குமதி செய்வதாக ரியூட்டர்ஸ் நிறுவனம் கண்டறிந்துள்ளது.வட கொரியாவும் தென் கொரியாவும் பரம் எதிரிகளாக இருந்து வருவது அனைவரும் அறிந்ததே. அப்படி இருக்க வட கொரிய அதிபருக்கு தென் கொரிய உதிரி பாகங்களைக் கொண்ட காரை புதின் பரிசளித்திருப்பது சர்ச்சையை கிளப்பியுள்ளது. “,