Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

மலைநாட்டில் உள்ள அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி வீட்டுரிமை வழங்கவேண்டும் - எஸ், டி, கணேசலிங்கம்.

,

மத்திய மலைநாட்டில் உள்ள அனைத்து பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி வீட்டுரிமையுடன் வழங்க இன்றைய அரசு முன்வர வேண்டும்.

இன்று 24.01.2026 சனிக்கிழமை காலை 10.30 மணிக்கு ஹட்டன் சிவாலயா மண்டபத்தில் காணி வீட்டுரிமை சம்பந்தமான கருத்து பரிமாற்றம் சம்பந்தமான கருத்து அரங்கு ஒன்று காணி வீட்டுரிமைக்காண நிறுவனத்தின் தலைவர் எஸ்.டி.கணேசலிங்கம் தலைமையில் இடம்பெற்றது.
நிகழ்வில் முன்னாள் அமைச்சர் வீ.புத்திரசிகாமணி, முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் எஸ்.சதாசிவம்,திரு.கணபதி கணகராஜ் முன்னாள் மஸ்கெலியா பிரதேச சபையின் தவிசாளர் கோவிந்தன் செம்பகவள்ளி மற்றும் சட்ட தரணிகள் பிரதேச சபை நகர சபை உறுப்பினர்கள் புத்திஜீவிகள் அதிபர்கள் ஆசிரியர்கள் தொண்டு நிறுவனங்களின் தலைவர்கள் 60 க்கு மேற்பட்டவர்கள் கலந்து கொண்டனர்.

நிகழ்வில் கருத்து தெரிவித்த சிவில் அமைப்பின் தலைவர் மற்றும் காணி வீட்டுரிமை நிறுவனத்தின் தலைவர் எஸ், டி, கணேசலிங்கம் கடந்த 202 ஆண்டு காலமாக பெருந்தோட்ட நிறுவனங்களில் பணி புரிந்து வரும் பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு காணி வீட்டுரிமைக்காண நிலம் வழங்க இன்றைய ஜனாதிபதி அனுரகுமார திசாநாயக்க முன் வர வேண்டும் அத்துடன் ஒவ்வொரு பெருந்தோட்டமும் முழுமை படுத்த பட்ட கிராமங்களாக அமைய வேண்டும்.அக் கிராமங்கள் அனைத்தும் சமய ஆலயங்கள் பாடசாலைகள் அஞ்சலகம் கிராமிய வைத்திய சாலை போன்ற வற்றை அமைத்து தர வேண்டும் என கேட்டுக் கொண்டார்.

தொடர்ந்து முன்னாள் அமைச்சர் மற்றும் நுவரெலியா மாவட்ட முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்கள் ஏனையோர் தங்களது கருத்துக்களையும் ஆலோசனைகளையும் எடுத்து கூறினார்கள்.