Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

இந்தியாவுக்கு நாடுகடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல்! மும்பை தாக்குதல் வழக்கில் தொடர்புடைய தஹாவ்வூர் ராணா...

,

2008ஆம் ஆண்டு மும்பை தீவிரவாத தாக்குதல் வழக்கில் தொடர்புடைய பாகிஸ்தான் வம்சாவளியை சேர்ந்த கனடாவில் வசித்து வந்த தஹாவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்தும்படி மத்திய அரசு கோரிக்கை விடுத்து வருகிறது.

மும்பை தீவிரவாத தாக்குதலில் தொடர்புடைய தஹாவ்வூர் ராணாவை இந்தியாவுக்கு நாடு கடத்த அமெரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புதல் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக தஹாவ்வூர் ராணா தாக்கல் செய்த மறு ஆய்வு மனுவை அந்நாட்டு உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. 

சான்பிரான்சிஸ்கோ மேல்முறையீட்டு நீதிமன்றம் உட்பட பல்வேறு அமெரிக்க நீதிமன்றங்களில் தம்மை இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவுக்கு எதிராக வழக்குத் தொடர்ந்தார். ஆனால், இந்தியாவுக்கு நாடு கடத்தும் உத்தரவு ரத்து செய்யப்படவில்லை. இறுதியாக கடந்த ஆண்டு நவம்பர் 13ஆம் தேதி அமெரிக்க உச்ச நீதிமன்றத்தில், இந்தியாவுக்கு நாடுகடத்தும் உத்தரவை மறுபரிசீலனை செய்யும் படி மனுத்தாக்கல் செய்திருந்தார். 

அவரது இந்த மனுவை கடந்த 21ஆம் தேதியன்று அமெரிக்க உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்து விட்டது. தஹாவ்வூர் ராணா இப்போது லாஸ் ஏஞ்சல்ஸில் உள்ள மெட்ரோபாலிடன் தடுப்பு மையத்தில் சிறை வைக்கப்பட்டுள்ளார். இந்த வழக்கில் அமெரிக்கா அரசு தரப்பில் வைக்கப்பட்ட வாத த்தில், ராணாவின் மறு ஆய்வு மனுவை தள்ளுபடி செய்ய வேண்டும் என்று கோரிக்கை விடுக்கப்பட்டது.கடந்த ஆண்டு டிசம்பர் 16ஆம் தேதி உச்ச நீதிமன்றத்தில் வாதிட்ட அமெரிக்க சொலிசிட்டர் ஜெனரல் எலிசபெத் பி பிரிலோகர், இந்த வழக்கில் ராணா இந்தியாவுக்கு நாடு கடத்தப்படுவதில் இருந்து அவருக்கு விலக்குப் பெற உரிமை இல்லை என்றார். மறு ஆய்வு மனுவில் தஹாவ்வூர் ராணா முன் வைத்த வாதத்தில், "2008ஆம் ஆண்டு மும்பை தாக்குதல் வழக்கில் அமெரிக்காவின் வட மாகாணமான இல்லினாய்ஸ் (சிகாகோ) நீதிமன்றத்தில் விசாரணை செய்யப்பட்டு விடுவிக்கப்பட்டுள்ளேன்," என்று தெரிவித்திருந்தார். மும்பையில் கடந்த 2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி நடந்த தாக்குதலில் தொடர்புடைய பாகிஸ்தான்-அமெரிக்க தீவிரவாதி டேவிட் கோல்மன் ஹெட்லியுடன் தொடர்புடையவர் தஹாவ்வூர் ராணா என்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. மும்பை நகருக்குள் நுழைந்த பாகிஸ்தான் தீவிரவாதிகள் 10 பேர் மும்பை நகரின் முக்கியமான இடங்களில் நடத்திய தாக்குதலில் அமெரிக்கர்கள் 6 பேர் உட்பட 166 பேர் கொல்லப்பட்டனர்.