Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு பிணை!

.

யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்த குற்றச்சாட்டில் தாக்கல் செய்யப்பட்ட வழக்கிலிருந்து பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனாவிற்கு நேற்று(16) பிணை வழங்கப்பட்டது.

தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிபந்தனை பிணையில் பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் அவருடன் சென்றிருந்த சட்டத்தரணி N.கௌஷல்யா ஆகியோர் விடுவிக்கப்பட்டுள்ளனர்.

பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா மற்றும் சட்டத்தரணி N.கௌஷல்யா ஆகியோர் கடந்த 9ஆம் திகதி யாழ்.போதனா வைத்தியசாலைக்குள் அத்துமீறி நுழைந்ததாக வைத்தியசாலையின் பணிப்பாளர், டொக்டர் த.சத்தியமூர்த்தியால் முறைப்பாடு செய்யப்பட்டிருந்தது.

இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று(16) யாழ்ப்பாணம் நீதிவான் நீதிமன்றத்தில் எடுத்துக்கொள்ளப்பட்டது.

இதன்போது பிரதிவாதிகள் இருவரையும் தலா ஒரு இலட்சம் ரூபா பெறுமதியான நிபந்தனை பிணையில் விடுவிப்பதற்கு உத்தரவிட்ட நீதவான், எதிர்வரும் காலங்களில் அனுமதி பெற்றே வைத்தியசாலைக்குள் பிரவேசிக்க வேண்டும் என அறிவுறுத்தியுள்ளார்.

அத்துடன், வைத்தியசாலையின் செயற்பாடுகளுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் செயற்படக்கூடாது எனவும் வழக்கு தொடர்பான அடுத்தகட்ட விசாரணைகள் சட்ட மாஅதிபரின் ஆலோசனைக்கமைய முன்னெடுக்கப்படும் எனவும் நீதவான் தெரிவித்துள்ளார்.