Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ரணில் கூறிய இரகசிய ஆரூடம் - தலைகீழாக மாறப் போகும் இலங்கையின் எதிர்காலம்!

,

முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் வீழ்ச்சிக்கு சுமார் ஒரு வருடம் முன்பு, அப்போதைய நாடாளுமன்ற உறுப்பினர் ரணில் விக்ரமசிங்க கூறிய அரசியல் மற்றும் பொருளாதார கணிப்புகள் பெரும்பாலானமை உண்மையாகின.

இந்நிலையில் சில நாட்களுக்கு முன்பு ரணில் விக்ரமசிங்க. தனது நெருங்கிய பத்திரிகையாளர்கள் குழுவிடம் இதேபோன்ற பல கணிப்புகளை வெளியிட்டுள்ளதாக தென்னிலங்கை தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதற்கமைய, நாட்டின் எதிர்காலம் மீண்டும் இருளடையும் என்று ரணில் விக்ரமசிங்க அந்த பத்திரிகையாளர்களிடம் கூறியதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. 

மக்களுக்கு நன்மை,

வெளிநாடுகளுக்கு மக்கள் குடிபெயர நான் ஒருபோதும் ஊக்குவித்ததில்லை. ஆனால் தற்போதுள்ள நிலையில் அதனை செய்தால் நாட்டு மக்களுக்கு நன்மை ஏற்படும் என ரணில் குறிப்பிட்டுள்ளார். 

இந்தியாவின் சக்திவாய்ந்த நபரிடமிருந்து சமீபத்தில் வந்த தொலைபேசி அழைப்பின் அடிப்படையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இந்த கணிப்புக்கு வழிவகுத்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

பல்வேறு விமர்சனங்கள்; பெரும்பான்மை பலத்துடன் சமகால அரசாங்கம் ஆட்சியில் இருந்தாலும், பொருளார ரீதியான அவர்களின் அணுகுமுறை தொடர்பில் பல்வேறு விமர்சனங்கள் எழுந்துள்ளன. 

அரசியல் அனுபவம் அற்ற புதியவர்களால் நாட்டினை சரியான முறையில் நிர்வகிக்க முடியவில்லை என பல்வேறு தரப்பிலிருந்தும் அதிருப்தி வெளியிடப்பட்டுள்ளன நிலையில் முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் கருத்து வெளியாகி உள்ளமை குறிப்பிடத்தக்கது.