Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் - சுதேச மருத்துவர் பார்த்தீபன் உமாதேவி

நாட்டில் இருக்கும் எமது வளங்களை கொண்டே மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதை அரசு முன்னெடுப்பதில்லை!

நாம் மக்களுக்காக சேவை செய்ய தயாரக இருக்கின்றோம் என அனைத்திலங்கை வருங்கால சுதேச மருத்துவ அதிகாரிகள்  சேவை சங்கத்தின் வைத்தியர் பார்த்தீபன் உமாதேவி தெரிவித்துள்ளார்.

யாழ் ஊடக அமையத்தில் ஞாயிற்றுக்கிழமை (20) ஊடக சந்திப்பின் போதே தெரிவித்தார்.

இவர் மேலும் தெரிவிக்கையில், 

நாடளாவிய ரீதியில் ஆயுர்வேத, சித்த என்ற ரீதியில் இலங்கையில் சுதேச மருத்துவம்  இருக்கின்றது. 

இந்த கற்கை நெறியை நிறைவுசெய்து தமிழ், சிங்களம், முஸ்லிம் என 1700 பட்டதாரிகள் வேலைக்காக காத்திருக்கின்றனர்.

இதைவிட 600 பேர் இறுதிப் பயிற்சி நிலையில் இருக்கின்றனர்.

இதே நேரம் மருத்துவப் பயிற்சி நெறியை முடித்தும் தம்மை பயன்படுத்தாத நிலையில் இலங்கையின் சுதேச மருத்துவம் இருப்பது கவலையானது.

மக்களுக்காக சேவை செய்ய நாம் தயாராக இருக்கின்றோம் ஆனால் அரசு மௌனமாக இருக்கின்றது.

அதைவிட  ஒன்பது  ஆண்டுகளுக்கு மேலாக ஏறத்தாள 1600 இற்கும் அதிகமானோர் இருக்கும் போது வெறும் 350 இற்கும் குறைவானவர்களையே நியமனத்தில் உள்வாங்க அரசு முனைகின்றனர்.

ஆனால் எம்மை கிராமங்கள் தோறும் சமூக நல வைத்திய அதிகாரிகளாக கூட எம்மை பயன்படுத்த முடியும்.

இந்த போக்கால் இலங்கைக்குரிய சுதேச மருத்துவம் இல்லாது அற்றுப்போகும் நிலையே உருவாகின்றது.

நாட்டில் இருக்கும் எமது வளங்களை கொண்டே   மருந்துகளை உற்பத்தி செய்ய முடியும். ஆனால் அதை அரசு முன்னெடுப்பதில்லை.

இவ்வாறன நிலையில் மேலதிக தகைமை என்று கூறி வேறு வேலைகளுக்கு கூட எம்மை இணைத்துக் கொள்கின்றார்கள் இல்லை என்றும் கூறிய அவர் இந்த நிலையை மாற்றியமைக்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும் என மேலும் தெரிவித்தார்.