Breaking News
பெரமுனவின் அதிநவீன தேர்தல் அலுவலகம்; தேர்தல் பிரச்சாரப் பொறிமுறை தயார்.
பொதுஜன பெரமுன பத்தரமுல்ல நெலும் மாவத்தை ஜெயந்திபுரவில் அதிநவீன தேர்தல் அலுவலகம் .
பெரமுனவின் அதிநவீன தேர்தல் அலுவலகம்; தேர்தல் பிரச்சாரப் பொறிமுறை தயார்.
எதிர்வரும் தேர்தல் பிரசாரங்களை முன்னெடுப்பதற்காக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன பத்தரமுல்ல நெலும் மாவத்தை ஜெயந்திபுரவில் அதிநவீன தேர்தல் அலுவலகத்தை இன்று வெள்ளிக்கிழமை காலை (10) திறந்து வைத்துள்ளது.
முன்னாள் சபாநாயகரும் நாடாளுமன்ற உறுப்பினருமான சமல் ராஜபக்ச இன்று வெள்ளிக்கிழமை காலை (10) அலுவலகத்தை திறந்து வைத்தார்.
தொகுதிகள் மட்டத்திலும் ஜனாதிபதி தேர்தல் செயற்பாட்டு அலுவலகங்கள் திறக்கப்படும் என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுன அறிவித்துள்ளது.
இந்நிலையில் எதிர்வரும் ஜனாதிபதித் தேர்தலுக்கான பரந்த பிரச்சாரப் பொறிமுறை தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அந்த கட்சி அறிவித்துள்ளது.
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் முன்னாள் தேசிய அமைப்பாளர் பசில் ராஜபக்ச உள்ளிட்ட பெருந்திரளான மக்கள் இந்நிகழ்வில் கலந்துகொண்டனர.
இதேவேளை, ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவை கீழ்மட்டத்திலிருந்து பலப்படுத்தும் புதிய வேலைத்திட்டங்கள் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக கட்சியின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ச அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.