Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு .

.

ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொதுவேட்பாளர்: மேலும் மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு.

இலங்கைத் தீவில் நடைபெவுள்ள ஜனாதிபதி தேர்தலில் தமிழ் பொது வேட்பாளர் ஒருவரை நிறுத்துவதற்கு எடுக்கப்பட்டுள்ள முடிவுக்கு மேலும் மூன்று அமைப்புகள் பூரண ஆதரவு வழங்கியுள்ளன.

இதன்படி,சாவகச்சேரி கைத்தொழில் வணிகர் மன்றம், சாவகச்சேரி கூட்டுறவு சபை மற்றும் யாழ் மாவட்ட பாரவூர்திகள் சங்கம் ஆகிய மூன்று பொதுஅமைப்புகள் தமது பூரண ஆதரவினை வெளிப்படுத்தியுள்ளன.

சிவில் சமூக கூட்டிணைவு செயற்பாட்டாளர்கள் நடாத்தி வரும் சந்திப்புகளின் தொடர்ச்சியாக நேற்று வெள்ளிக்கிழமை (31) குறித்த அமைப்புகளின் தலைவர்கள், நிர்வாக உத்தியோகத்தர்கள் மற்றும் உறுப்பினர்களுடனான நேரடி சந்திப்பும் கலந்துரையாடலும் அமைப்புகளின் அலுவலகங்களில் இடம்பெற்றன.

சாவகச்சேரியிலும், கோண்டாவிலிலும் இடம்பெற்ற சந்திப்புக்களில் தமிழ் பொது வேட்பாளருக்கு தமது பூரண ஆதரவை வழங்கியுள்ள இந்த அமைப்புகளின் பிரதிநிதிகள் குறித்த விடயம் வெற்றிபெறுவதற்கு தாம் பூரண ஒத்துழைப்புகளை வழங்க தயாராக உள்ளதாகவும் சந்திப்பில் கலந்து கொண்ட சிவில் சமூக பிரதிநிதிகள், பல்கலைக்கழக மாணவர்களிடம் தெரிவித்தனர்.