மழையில் ரீல்ஸ் வீடியோ எடுத்த சிறுமிக்கு காத்திருந்த பேரதிர்ச்சி!
.
மழையில் நனைந்தபடி நடனம் ஆடுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சிறுமி அருகில் மின்னல் தாக்கியது.
மழையில் நனைந்தபடி நடனம் ஆடுவது போன்று ரீல்ஸ் வீடியோ எடுத்துக்கொண்டிருந்த சிறுமி அருகில் மின்னல் தாக்கிய சம்பவம் ஒன்று இடம்பெற்றுள்ளது.எனினும் அவர் அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பியுள்ளார்.சமூக வலைதளங்களில் இளைஞர்கள் மட்டுமல்லாது சிறுவர்களும் வீடியோக்களை பகிர்ந்து வருகின்றனர்.
லைக்குகளை குவிக்க வேண்டும் என்ற ஆசையில் சிறுவர்கள் முதல் பெரியவர்கள் வரை பலதரப்பட்டவர்களும் வித்தியாசமான செயல்களை செய்து அதன்மூலம் ரீல்ஸ் வீடியோ தயாரித்து வெளியிடுகின்றனர்.
அவற்றில் சில வீடியோக்கள் விமர்சனங்களை எதிர்கொள்வதோடு மட்டுமல்லாமல் விபரீதமாகவும் முடிந்து விடுகிறது. அதுபோன்ற ஒரு சம்பவம் இந்தியாவின் பீகாரில் நடந்துள்ளது.
அங்குள்ள சீதாமர்ஹி பகுதியில் சிறுமி ஒருவர் கொட்டும் மழையில் நனைந்தபடி நடனம் ஆடுவது போன்று ரீல்ஸ் வீடியோ தயாரித்து கொண்டிருந்தார்.
மொட்டை மாடியில் நின்று அவர் மழையில் நனைந்தவாறு நடனமாடி வீடியோ எடுத்த போது அவரது அருகில் மின்னல் தாக்கி உள்ளது.இதில் அதிர்ஷ்டவசமாக அந்த சிறுமி உயிர் தப்பி உள்ளார்.இந்த வீடியோ தற்போது சமூகவலைத்தளங்களில் பரவி வரும் நிலையில் பலரும் விமர்சனங்களை வௌியிட்டு வருகின்றனர்.ஆபத்துக்களை உணராது இதுபோன்று இடம்பெறும் செயல்களால் விபரீதங்கள் ஏற்படும் வாய்ப்புள்ளதை மறக்க வேண்டாம்.