Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

தியத்தலாவை பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர்.

தியத்தலாவை துயரச் சம்பவம் பற்றி வௌியான தகவல்

தியத்தலாவை துயரச் சம்பவம் பற்றி வௌியான தகவல்

தியத்தலாவை பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயத்தின் போது இடம்பெற்ற விபத்தில் 7 பேர் உயிரிழந்தனர். மேலும் 23 பேர் படுகாயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.

2024 பொக்ஸ் ஹில் மோட்டார் பந்தயம் இன்று காலை தியத்தலாவை நரியகந்த பந்தய திடலில் ஆரம்பமானது.

5 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தப் போட்டி நடைபெற்றது. இந்த பந்தயம் இறுதியாக கடந்த 2023 ஆண்டு ஏப்ரல் 21 ஆம் திகதி நடத்தப்பட்ட நிலையில் அன்று இடம்பெற்ற உயிர்த்த ஞாயிறு தாக்குதல் காரணமாக பாதியிலேயே நிறுத்தப்பட்டது.                                                                                                                                                                                      இதன்படி 5 வருடங்களாக போட்டிகள் நடத்தப்படவில்லை எனவும், இம்முறை போட்டிக்கு அதிகளவான பங்கேற்பு காணப்படுவதாகவும் தெரிவிக்கப்பட்டது.                                                                                                                                              இன்று (21) காலை ஆரம்பமான இப்போட்டியில் கார் ஒன்று பந்தய திடலை விட்டு விலகி பயணித்ததில் இந்த விபத்து இடம்பெற்றுள்ளது. விபத்தில் உயிரிழந்த 7 பேரில் 8 வயது சிறுமியும் அடங்குவதாக பொலிஸார் தெரிவித்தனர்.

இந்த விபத்தில் 4 பந்தய உதவியாளர்களும் உயிரிழந்ததாக கூறப்படுகிறது.விபத்தின் பின்னர் பந்தயத்தை நிறுத்த நடவடிக்கை எடுத்ததாக பொலிஸ் ஊடகப் பேச்சாளர் நிஹால் தல்துவா தெரிவித்தார்.