Breaking News
டாக்டர் செல்வா தெய்வகுமார். இங்கிலாந்தின் முன்னணி பல்கலைக்கழக மருத்துவமனைகளில் பிரபல இதய வைத்திய சத்திரசிகிச்சை நிபுணர்.
யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவரும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியுமான இதய சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர்.

லண்டனில் இருந்து அவுஸ்திரேலியா புறப்படத் தயாரான விமானத்தில் திடீரென ஏற்பட்ட இதய வலி காரணமாக
68 வயதான ஒருவர் ( பச்சை நிற ஆடையுடன் அமர்ந்திருப்பவர்)
அவசர அவசரமாக லண்டனின் பிரபல மருத்துவ மனைக்கு கொண்டு செல்லப்பட்டு உடனடியாக மேற்கொண்ட
சத்திரசிகிச்சை மூலம் சுகமாகி மீண்டும் ஒரு வாரத்தின் பின்னர் அவுஸ்திரேலியா சென்றடைந்துள்ளார் .
இந்த உடனடி சத்திரசிகிச்சையை வெற்றிகரமாக செய்து முடித்த நிபுணர் குழுவிற்கு தலைமை தாங்கியவர் யாழ் இந்துக் கல்லூரி பழைய மாணவரும் கொழும்பு பல்கலைக்கழக மருத்துவ பட்டதாரியுமான இதய சத்திரசிகிச்சை நிபுணர் டாக்டர் செல்வா தெய்வகுமார் அவர்கள்.
தொலைக்காட்சி மருத்துவ நிகழ்ச்சி பலவற்றில் கலந்து கொண்டு உலக மக்களுக்கு ஆலோசனை வழங்கிய பெருமைக்குரியவர் ஆவார்.இன்று இங்கிலாந்தின் முன்னணி பல்கலைக்கழக மருத்துவமனைகளில் பிரபல இதய வைத்திய சத்திரசிகிச்சை நிபுணராக விளங்குகிறார் .