Breaking News
நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற மோதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 27! கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி!

யாழ்பாணத்தை சேர்ந்த இளம் கிளிநெச்சியில் பெண் கடத்தல்!

.

கிளிநொச்சி , இரணைமடுச் சந்தி கனகாம்பிகைக்குளம் வீதியில் வைத்து இளம் பெண்ணொருவர் நேற்று (16) மாலை 6 மணியளவில் கடத்தப்பட்ட சம்பவம் பரப்ரப்பை ஏற்படுத்திய நிலையில், முன்னாள் காதலனே யுவதியை கடத்தியமை அம்பலமாகியுள்ளது.

யாழ்ப்பாணம் புன்னாக்லைக்கட்டுவான் பகுதியைச் சேர்ந்த 26 வயதுடைய குறித்த யுவதி, கிளிநொச்சியிலுள்ள அழகுக்கலை நிலையம் ஒன்றில் பயிற்சி பெற்று வரும் நிலையில், அங்கு வாடகை வீடு ஒன்றில் தங்கியிருந்துள்ளார்.

இந்த நிலையில் யுவதி தான் தங்கியிருக்கும் இடத்துக்கு திரும்புகையில் வான் ஒன்றில் சென்ற குழுவினர் யுவதியை கடத்திச் சென்றமை ஆரம்ப விசாரணையில் தெரியவந்துள்ளது.

யுவதியின் கைப்பை மற்றும் தொலைபேசி ஆகியன கண்டெடுக்கப்பட்ட நிலையில் அது தொடர்பில் பொலிஸாருக்கு தகவல் வழங்கப்பட்டுள்ளது. சம்பவ இடத்துக்கு சென்ற தலைமைப் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி தலைமையிலான பொலிஸார் விசாரணைகளை ஆரம்பித்துள்ளனர்.

குறித்த யுவதியை கடத்திச் சென்றவர் யாழ்ப்பாணம் புன்னாலைக்கட்டுவன் பகுதியைச் சேர்ந்தவர் என்றும், அவர் யுவதியின் முன்னாள் காதலன் என்றும் தெரியவந்துள்ளது.

முன்னாள் காதலன் யுவதியை, யாழ்ப்பாணம் – புன்னாலைக்கட்டுவன் பகுதிக்கு கடத்திச் சென்றுள்ளார். கடத்திச் செல்லப்பட்ட யுவதி திருமணத்துக்கு மறுப்பு தெரிவித்தவேளை, யுவதியின் நண்பியை அழைத்த கடத்தல் குழு அந்த யுவதியை நண்பியின் பாரப்படுத்திவிட்டு தப்பிச் சென்றது.

இந்நிலையில் நண்பி , யுவதியை கிளிநொச்சி பொலிஸ் நிலையத்திற்கு அழைத்துச் சென்ற நிலையில் மருத்து பரிசோதனைக்காக யுவதி வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதுடன், கிளிநொச்சி பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.