Breaking News
கடந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரிந்தது.ஆனால் இந்த ஆட்சியில் களவு எடுப்பவர்கள் யார் என தெரியாது! நீதி இல்லா நாட்டில் நீதி அமைச்சர் எதற்கு? இரான் மீதான அமெரிக்காவின் கடற்படை முற்றுகை விலக்கம்! வலிகாமம் வடக்கு பிரதேச செயலக அபிவிருத்தி கூட்டத்தில் கஜேந்திரகுமார், அர்ச்சுனா வாய்த்தர்க்கம்! செம்மணி :செத்துக்கிடப்பது யாரின் செல்லக்குழந்தையோ ! செம்ணி இலங்கையின் மிகப்பெரிய புதைகுழியாக மாறியது! கறிப்பையில் கசிப்பு கட்டி முடிய முன் தட்டி தூக்கிய சுன்னாகம் பொலிஸார்! முன்னெப்போதையும் விட நவீனமான மற்றும் வலிமைமிக்க ஆயுதப் படைகளைக் கொண்டுள்ளது பிரான்ஸ் - மக்ரோன்! என் சிம்பொனி பயணத்துல இது முதல் அத்தியாயம்! - லிடியன் உயிர்த்த ஞாயிறு தாக்குதல் விசாரணை திசைதிருப்ப முன்னெடுக்கப்படும் செயற்பாடுகள்: கண்டித்து மட்டக்களப்பில் அ போராட்டம்! இலங்கை இராணுவத்திற்கு 5.5 மில்லியன் டொலர் பெறுமதியான இராணுவப் பொருட்களை இலவசமாக வழங்கியது இந்தியா! யாழ். சென் பற்றிக்ஸ் கல்லூரி மாணவன் சர்வதேச இளைஞர் முகாமில் பங்குபற்றுவதற்காக ஜேர்மனி பயணம்! இலங்கையின் மிகப்பெரிய மனித புதைகுழியாக செம்மணி மனித புதைகுழி பதிவானது ஆங்கிலக் கால்வாயில் பதற்றத்தின் தீப்பொறி! இசைத் திருவிழா 2026: நள்ளிரவில் எவ்வளவு நேரம் வரை இசைக்கலாம்? அரசு விதிமுறைகள் என்ன?

லெபனான் மீதான தாக்குதலுக்கு பதிலடி; இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா ராக்கெட் தாக்குதல்

.

அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியத்தால் தடை செய்யப்பட்ட ஹிஜ்புல்லா அமைப்பு, ஈரான் ஆதரவுடன் லெபனானில் ஆதிக்கம் செலுத்தி வருகிறது. காசாவில் இஸ்ரேல்-ஹமாஸ் இடையே நடந்து வரும் போரில், ஹமாஸ் அமைப்புக்கு ஹிஜ்புல்லா ஆதரவு தெரிவித்துள்ளது. அதோடு இஸ்ரேல் மீது ஹிஜ்புல்லா அமைப்பினர் தொடர்ந்து ஏவுகணை மற்றும் டிரோன் தாக்குதல் நடத்தி வருகின்றனர்.

இதனையடுத்து, லெபனான் நாட்டில் உள்ள ஹிஜ்புல்லா இலக்குகள் மற்றும் உட்கட்டமைப்புகள் மீது இஸ்ரேல் ராணுவம் தாக்குதல் நடத்தியது. இதுபற்றி இஸ்ரேல் பாதுகாப்பு மந்திரி யோவா கேலண்ட் எக்ஸ் ஊடகத்தில் கூறும்போது, \”போரின் புதிய கட்ட தொடக்கத்தில் நாங்கள் இருக்கிறோம். இஸ்ரேலின் வடக்கு பகுதியில் அதிக கவனம் செலுத்துவோம்\” என்றார். இதற்கிடையில் லெபனானில் கடந்த சில நாட்களுக்கு முன்பு பேஜர் கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.

இதில் 12 பேர் உயிரிழந்த நிலையில், 2800-க்கும் அதிகமானோர் படுகாயமடைந்தனர். பாதுகாப்பு காரணங்களுக்காக ஹிஜ்புல்லா அமைப்பினர் செல்போன்களுக்கு பதிலாக பேஜர் கருவிகளை பயன்படுத்தி வந்த நிலையில், நாடு முழுவதும் பேஜர் கருவிகள் வெடித்துச் சிதறியது பரபரப்பை ஏற்படுத்தியது. அந்த பரபரப்பு அடங்குவதற்குள், அடுத்த நாளே லெபனானில் வாக்கி டாக்கி கருவிகள் ஒரே நேரத்தில் வெடித்துச் சிதறின.

இதில் 14 பேர் உயிரிழந்ததாகவும், 450-க்கும் மேற்பட்டோர் படுகாயமடைந்ததாகவும் அந்நாட்டு சுகாதாரத்துறை அமைச்சகம் தெரிவித்துள்ளது. அதே சமயம், இது இஸ்ரேலின் சைபர் தாக்குதலாக இருக்கலாம் என சந்தேகிப்பதாகவும், இதற்கு தக்க பதலடி கொடுப்போம் எனவும் ஹிஜ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

இந்த நிலையில், இஸ்ரேலின் வடக்கு பகுதியில் இன்று ஹிஜ்புல்லா அமைப்பினர் ராக்கெட் வீசி தாக்குதல் நடத்தியுள்ளனர். சுமார் 140 ராக்கெட்டுகளைக் கொண்டு தாக்குதல் நடத்தப்பட்டதாகவும், இஸ்ரேலின் விமான படைத்தளங்களை குறிவைத்து தாக்கியதாகவும் ஹிஜ்புல்லா தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.