Breaking News
அநுரவுடன் இலங்கைக்கான நோர்வே தூதுவர் சந்திப்பு.
மே-எலின் ஸ்டெனர்,ஜே.வி.பி ஆகியோருக்கிடையிலான சந்திப்பு.
அநுரவுடன் இலங்கைக்கான நோர்வே தூதுவர் சந்திப்பு.
தேசிய மக்கள் சக்தியின் தலைவர் அநுரகுமார திஸாநாயக்க மற்றும் இலங்கைக்கான நோர்வே தூதுவர் மே-எலின் ஸ்டெனர் ஆகியோருக்கிடையிலான சந்திப்பு ஜே.வி.பி. தலைமையகத்தில் நேற்று வியாழக்கிழமை பிற்பகல் நடைபெற்றது.
இந்த சந்திப்பில் நோர்வே தூதரகத்தின் இரண்டாவது செயலாளரான ஜோன் பிஜேர்கெம் , தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹரினி அமரசூரிய மற்றும் பாராளுமன்ற உறுப்பினர் விஜித ஹேரத் ஆகியோர் கலந்து கொண்டனர்.
இதன்போது, நாட்டில் தற்போது நிலவும் பொருளாதார நெருக்கடி தொடர்பிலும் அரசியல் ரீதியிலான பிரச்சனைகள் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டன.
இந்நிலையில் நோர்வே அரசாங்கத்தினால் இலங்கைக்கு வழங்கப்படவுள்ள உதவிகள் மற்றும் இரு நாடுகளுக்கிடையிலான உறவை வலுப்படுத்தலின் அவசியம் தொடர்பிலும் கலந்துரையாடப்பட்டது.